ஈழம்

ஈழம்

புதன், 2 டிசம்பர், 2015

தமிழீழ விடுதலை புலிகளிடம் போராடி தோற்ற இந்திய படைகள் பாகம் 11

யாழ் நகரை நோக்கி பல முனைகளிலும் நகர்வுகளை மேற்கொண்டிருந்த இந்தியப் படையினர் புலிகளின் பலத்த இடைமறிப்புத் தாக்குதல்கள் காரணமாக முன்னேற முடியாமல் தடுமாறிக்கொண்டிருந்தார்கள்.

நான்கு நாட்களுக்குள் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிவிடுவோம்|| யாழ்ப்பாணத்தில் நிலைகொண்டுள்ள புலிகளை நாலாபக்கமும் சுற்றிவழைத்து இந்தியப் படை நகர்ந்து கொண்டிருக்கின்றது. அவர்களால் எப்பக்கமும் நகர முடியாதபடிக்கு இந்தியப் படையினர் புலிகளைச் சுற்றி வழைத்து நகர்ந்து கொண்டிருக்கின்றார்கள்|| என்றெல்லாம் இந்தியாவின் தேசிய ஊடகங்களான ஆக்காஷவாணியிலும்| தூரதர்ஷனிலும்| கதைவிட்டபடி நடவடிக்கைகளில் இறங்கியிருந்த இந்தியப் படையினரால் பத்து நாட்கள் கடந்துவிட்டிருந்த போதும் யாழ் நகருக்குள் செல்லமுடியவில்லை என்பது இப்போதைய இந்திய ஆட்சிக்கும் அதன் படைத்துறைக்கும் மிகுந்த அவமானத்தைப் பெற்றுத் தந்திருந்தது.

இந்திய இராணுவம் பல புதிய படைப் பிரிவுகளை இந்தியாவில் இருந்து அவசரஅவசரமாக வரவழைத்து களம் இறக்கியிருந்தது.

தமது போர் உத்திகளை அடிக்கடி மாற்றி அமைத்தது. புலிகளைப் பற்றி இந்திய உளவு அமைப்பான றோ| தந்திருந்த தரவுகளை எல்லாம் தூக்கி எறிந்துவிட்டு புலிகள் தொடர்பான புதிய தரவுகளை யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்த ஸ்ரீலங்காப் படைகளிடம் இருந்து பெற்றுக்கொள்ள ஆரம்பித்திருந்தது.

புலிகளின் தாக்குதல் முறைகள் இந்தியப் படையினருக்கு பெரும் தலையிடியாகவே இருந்தன. 1971ம் ஆண்டிற்கு பின்னர் இந்தியப் படையினர் எந்த ஒரு யுத்தத்திலும் பங்கு பற்றவில்லை.

1956ம் ஆண்டு முதல் இந்தியாவின் நாகலாந்து பிரதேசத்திலும் 1984 இன் நடுப்பகுதி முதல் காலிஸ்தானிலும் இந்தியப் படையினர் கெரில்லாத் தாக்குதல்களை முறியடிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுவந்தாலும் புலிகளின் தாக்குதல் யுத்திகள் இந்தியப் படையினருக்கு புதியவைகளாகவே இருந்தன. அவர்கள் தமது யுத்தக் கல்லூரிகளிலும் சரி இராணுவப் பயிற்சி நடவடிக்கைகளின் போதும் சரி புலிகள் மேற்கொண்ட கெரில்லாத் தாக்குதல் பாணிகள் தொடர்பான பயிற்சிகள் பற்றிய அறிவைக் பெற்றிருக்கவில்லை. விடுதலைப் புலிகளுக்கு இந்தியாவின் உளவு பிரிவான றோ| பயிற்சிகளை வழங்கியதாகப் பிதற்றிக்கொண்டாலும் புலிகள் இந்தியப் படையினருடனான யுத்த முனைகளில் கையாண்ட யுத்த முறைகள் றோ| முதற்கொண்டு இந்தியப் படையினரின் பயிற்சி ஆசிரியர்கள் வரை மிகவும் புதியவைகளாகவே இருந்தன.

அவசர அவசரமான இலங்கையில் இரண்டு யுத்தக் கல்லூரிகளை நிறுவி யுத்த நடவடிக்கைகளில் ஈடுபட்ட இந்தியப்படையினருக்கு புலிகளின் சண்டை யுத்திகள் பற்றிய புதிய பயிற்சி நெறியைக் கற்பிக்கவேண்டிய அவசியம் இந்தியப் படைத்துறைத் தலைமைக்கு ஏற்பட்டதும் இதனால்தான்.

இந்தியா விட்ட கதைகள்:
இதற்கிடையில் இந்தியப் படையினர் யாழ் நகரைக் கைப்பற்றுவதில் ஏற்பட்டிருந்த காலதாமதத்தை நியாயப்படுத்த இந்திய அரசியல் தலைமையும் இராணுத் தலைமையும் சில சப்பைக்கட்டு காரணங்களை தமது பிரச்சார ஊடகங்கள் வாயிலாக கட்டவிழ்த்து விட்டிருந்தன.

விடுதலைப் புலிகள் பெண்கள் சிறுவர்களை முன்நிறுத்தி அவர்களின் பின்னால் நின்று சண்டை புரிவதாக|| இந்தியத் தலைமை தொடர்ந்து கூற ஆரம்பித்திருந்தது.

சண்டைகள் உக்கிரம் அடைந்து இந்தியப் படையினர் பலத்த இழப்புக்களைச் சந்தித்து இந்தியப் படை வீரர்களின் உடல்கள் தொடர்ந்து இந்தியாவிற்கு கொண்டுவரப்பட ஆரம்பித்ததைத் தொடர்ந்து இந்தியத் தலைமையின் இதுபோன்ற புளுகுகள் மேலும் அதிகரிக்க ஆரம்பித்தன.

இந்தியப் படையினரின் முகாம்களை நோக்கி பெரும் திரளான பொதுமக்கள் சிறுவர்கள் வருவார்களாம்@ அவர்களுடன் பேசவென்று இந்தியப் படை அதிகாரிகள் வெளியில் வருவார்களாம்@ திடீரென்று அந்தப் பொதுமக்களும் சிறுவர்களும் நிலத்தில் விழுந்து படுத்து விடுவார்களாம்@ அவர்களின் பின்னால் வரும் விடுதலைப் புலிகள் இந்தியப் படையினரை நோக்கித் துப்பாக்கியால் சுடுவார்களாம்.| இப்படிப் பல கதைகளை இந்தியப் படை அதிகாரிகள் இந்தியாவின் தூரதர்ஷனிலும் ஆல் இந்தியா ரேடியோவிலும்;; தினசரிகளிலும் அவிழ்த்துவிட்டிருந்தார்கள்.

இப்படியான கதைகள் இந்தியாவின் தலைமைக்கு இரண்டு வகைகளில் உதவியிருந்தன.

முதலாவது இந்தியப் படையினர் தரப்பில் ஏற்பட ஆரம்பித்திருந்த அளவிற்கதிகமான உயிரிழப்பிற்கு காரணம் கற்பிப்பதற்கு இதுபோன்ற கதைகள் உதவியிருந்தன. அடுத்ததாக யாழ்ப்பாணத்தில் அப்பாவிப் பொதுமக்களை இந்தியப் படையினர் கொலை செய்வதாக வெளியாக ஆரம்பித்திருந்த செய்திகளுக்கு நியாயம் கற்பிப்பதற்கும் இதுபோன்ற கதைகள் இந்தியப் படைத்துறை தலைமைகளுக்கு உதவியிருந்தன.

இந்தியப் படையினர் ஈழத்தில் தமிழ் பெண்களை பாலியல் வல்லுறவிற்கு உள்ளாக்கிவருவதாகவும் தமிழ் நாட்டில்; செய்திகள் வெளியாகி இருந்தன. இந்தியப் படையினரின் அந்த நடவடிக்கைக்கு நியாயம் கற்பிப்பதற்கு இந்தியப் படைத்துறைத் தலைமை கைவசம் ஒரு கதையை வைத்திருந்தது. யாழ்ப்பாணத்தில் இந்தியப் படையினரால் கைப்பற்றப்பட்ட பிரதேசங்களில் இந்தியப் படையினர் தேடுதல்கள் நடாத்தச் செல்லும்போது அங்கு இருக்கும் இளம் பெண்கள் திடீரென்று தமது பாவாடைகளுக்குள் இருந்து துப்பாக்கிகளை எடுத்து இந்தியப் படையினரை நோக்கிச் சுட்டுவிடுகின்றார்கள்|| என்று இந்தியப் படையினரின் பெண்கள் மீதான வன்முறைகளுக்கு இந்தியத் தலைமை நியாயம் கற்பித்திருந்தது.

வெறும் கதைகளினாலேயே கட்டியமைக்கப்பட்டிருக்கும் இந்தியா ஈழ மண்ணில் தான் நிகழ்த்திய அனைத்து அட்டூழியங்களுக்கும் ஏதாவது ஒரு கதையைக் கூறி அவற்றை நியாயப்படுத்த முற்பட்டது. யாழ்ப்பாணத்தில் அகதிமுகாமைத் தாக்கிவிட்டு அதற்கொரு கதை@ கோவிலைத் தாக்கிவிட்டு அதற்கொடு கதை@ வைத்தியசாலையில் படுகொலைகள் புரிந்துவிட்டு அதற்கொரு வியாக்கியானம் - என்று ஈழ மண்ணில் இந்தியப் படைகள் ஆடிய கோர தாண்டவங்கள் அனைத்திற்குமே இந்தியா அழகான கட்டுக்கதைகளை அமைத்திருந்தது - அதன் சரித்திரத்தைப் போல.

ஒரு கையை பின்னால் கட்டியபடி …
இவற்றில் மிகவும் சுவாரசியமான விடயம் என்னவென்றால் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி வெளிட்ட மற்றொரு கதைதான்.

இலங்கையில் இந்தியப் படையினர் தமது கைகளில் ஒன்றைப் பின்னால் கட்டிக்கொண்டு போராடி வருவதாக| இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி தெரிவித்த கருத்துத்தான் அந்த ஆண்டின் சிறந்த நகைச்சுவை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியப் படையின் ஒவ்வொரு ஜவான்களும் ஈழத்தில் கண்மூடித்தனமான மனித வேட்டைகளில் இறங்கியிருந்தபோது பெண்கள் சிறுவர்கள் வயோதிபர்கள் என்ற பாகுபாடில்லாமல் தமிழ் மக்களைக் கொன்று குவித்துக் கொன்டிருந்தபோது தமிழ் மக்களின் சொத்துக்களைச் சூறையாடி அழித்துக்கொண்டிருந்தபோது இந்தியப் பிரதமர் இந்த நகைச்சுவைத் துணுக்கை வெளியிட்டிருந்தார்.

இந்தியத் தலைவரின் இந்தக் கூற்றுப் பற்றி விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் அவர்கள் பின்வருமாறு கருத்துத் தெரிவித்திருந்தார்:

இந்திய இராணுவம் ஒரு கையைப் பின்னால் கட்டியபடி போராடியது என இந்தியா கூறுவது கேலிக்கூத்தானது. ஒரு கையைப் பின்னால் கட்டியபடி இந்திய இராணுவம் எமது மக்கள் மீது இத்தகைய கொடுமைகளைச் செய்தார்கள் என்றால் இரு கைகளாலும் எத்தகைய அட்டூழியங்களைப் புரிந்திருப்பார்கள் என்பதை நினைத்துப் பார்க்கவே நெஞ்சு நடுங்குகின்றது||

ஷெல்வந்த நாடு
யாழ் நகரைக் கைப்பற்றும் நோக்கத்துடன் பல முனைகளிலும் நகர ஆரம்பித்திருந்த இந்தியப் படையினர் மனித வேட்டைகளை நடாத்தியபடியே தமது நகர்வுகளை மேற்கொண்டிருந்தார்கள். படுகொலைகள் கொள்ளைகள் வீடுடைப்புக்கள் பாலியல் வல்லுறவுகள் என்று தமிழ் மக்கள் மீது அட்டூழியங்களைப் புரிந்தபடியே இந்தியப் படையினரின் அந்த நகர்வுகள் இருந்தன.

மக்களுக்கு என்ன செய்வது என்று புரியவில்லை. எங்கு செல்வது என்றும் புரியவில்லை.

ஸ்ரீலங்காப் படைகளின் தாக்குதல்கள் உக்கிரமடையும் கட்டங்களில் இந்தியா தலையிட்டு எம்மைக் காப்பாற்றும் என்ற ஒரு நம்பிக்கை தமிழ் மக்கள் மத்தியில் இருந்து வந்தது. ஆனால் அந்த இந்தியாவே தம்மீது இப்படியான ஒரு நெருக்குதலை ஏற்படுத்தும்போது என்ன செய்வது என்று எதுவுமே புரியாமல் மக்கள் தடுமாற்றம் அடைந்தார்கள்.

மக்கள் குடியிருப்புக்களில் நிமிடத்திற்கு ஒரு செல் வந்து விழுந்து வெடித்துக்கொண்டிருந்தன. இந்தியப் படையினர் நகர்வினை மேற்கொண்ட இடங்களெல்லாமே பிணக் குவியல்களாகவே காட்சி தந்தன. இந்தியப் படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற சண்டைகளும் மிகவும் உக்கிரமாகவே இருந்ததால் மக்கள் செய்வதறியாது திகைத்துப் போய் நின்றார்கள். அவர்களால் எந்தப் பக்கமும் நகர முடியவில்லை. போதாததற்கு இந்தியப் படையினரின் விமானங்கள் பறந்து பறந்து மக்களை நோக்கி தாக்குதல்களை நடாத்தியபடி திரிந்தன. மீண்டும் யாழ்ப்பாணம் ஷெல்| வந்த நாடாக மாறியது. பழையபடி யாழ் மக்களை அகதி வாழ்க்கை அழைத்தது.

அகதி முகாம்களில் அவதி 
மக்கள் தமது வீடுகளில் தொடர்ந்து தங்கி இருப்பது தமது உயிருக்கும் மானத்திற்கும் ஆபத்து என்று உணர்ந்து படிப்படியாக பொது இடங்களை நோக்கி அடைக்கலம்தேடி இடம்பெயர ஆரம்பித்தார்கள். யாழ் குடாவெங்கும் திடீர் அகதி முகாம்கள் பல முளைக்க ஆரம்பித்தன. கோவில்கள் பாடசாலைகள் அகதி முகாம்களாயின.

மக்கள் கைகளில் அகப்பட்ட முக்கியமான பொருட்களையும் மாற்றுத் துணிகளையும் மட்டும் தம்முடன் எடுத்துக்கொண்டு அகதி முகாம்களை நோக்கி அவசரஅவசரமாகப் படையெடுக்க ஆரம்பித்திருந்தார்கள்.

யாழ்பாணத்தில் வசிக்கும் அனேகமான குடும்பங்களிடம் குறைந்தது 50 பவுன்களுக்கு அதிகமான எடையுள்ள தங்கநகைகள் இருப்பது வழக்கம். அவர்கள் என்ன கஷ்டம் வந்தாலும் தம்மிடமுள்ள நகைகளில் கைவைப்பது அரிது. இன்னும் அதிகமாக நகைகள் செய்து தம்முடன் வைத்துக்கொள்வதிலேயே குறியாக இருப்பார்களே தவிர இலகுவில் தமது நகைகளை விற்றுவிடமாட்டார்கள். யாழ் நகரை நோக்கிப் படையெடுத்திருந்த இந்தியப்படை ஜவான்களும் இந்த நகைகளை குறிவைத்து தமது வேட்டைகளை ஆரம்பித்திருந்ததால் மக்கள் தமது வீடுகளை விட்டு வெளியேற ஆரம்பித்த போது நகைகளை எங்காவது மறைத்துவைத்துவிட்டே வெளியேறவேன்டி இருந்தது.

பெண்கள் தமது தாலிகளைக்கூட கழட்டி ஒளித்துவைக்க வேண்டிய துர்பாக்கிய நிலை ஏற்பட்டது. நகைகளையும் பண நோட்டுக்களையும் பத்திரமாக நிலத்தின் அடியில் புதைத்துவிட்டு புதைத்த இடத்தின் மீது அடையாளத்திற்கு எதையாவது நட்டு வைத்துவிட்டு கனத்த மனங்களுடன் தமது வீடுகளை விட்டு மக்கள் வெளியேற ஆரம்பித்தார்கள்.

இளைஞர்கள் தங்களது பாடசாலை நற்சான்றுப் பத்திரங்கள் பரிட்சைப் பெறுபேறு ஆவணங்கள் கடவுச் சீட்டுக்கள் அடையாள அட்டைகள் என்பனவற்றை கவனமாக பைகளில் போட்டு தம்முடன் எடுத்துச் சென்றார்கள். ஒருவேளை உயிர் தப்பினால் எதிர்காலத்தை அமைத்துக்கொள்வதற்கு அவைகள் மிகவும் அவசியம் என்று அவர்கள் நினைத்திருந்தார்கள்.

யாழ் குடாவின் கலச்சார மையம் என்று கூறப்படுகின்ற நல்லூர் கந்தசாமி கோயில் யாழ்பாண நகர மக்களின் பிரதான அகதி முகாமாக உருவெடுத்திருந்து.

ஆயிரக்கணக்கில் அங்கு வந்து தஞ்மடைய ஆரம்பித்த மக்களின் நெருக்கடி தாங்காது கோயிலே திண்டாடியது. சுமார் 25 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் நல்லூர் கந்தசாமி கோயிலில் அப்பொழுது தஞ்சமடைந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது. 
அத்தனை நெருக்கடியிலும் கோயில்களில் திரண்டிருந்த மக்களிடையே யாழ் மக்களுக்கே உரித்தான சாதிப்பிரச்சினைகளும் கிழம்ப ஆரம்பித்தன.

உயர்ந்த சாதியினருக்கு கோயிலில் முக்கிய வசதியான இடத்தில் ஒதுக்கீடு வேண்டும் என்ற கோரிக்கைகளும் அங்கு எழுந்திருந்தன.

அங்கிருந்த மற்றவர்களுக்கு இது மிகுந்த எரிச்சலை ஏற்படுத்தியிருந்தது. இவற்றினால் இடைக்கிடையே வாய்த்தர்க்கமும் கைகலப்பும் கூட ஏற்பட ஆரம்பித்தன. சனநெருக்கடிக்கு மத்தியில் சிலர் தமது வீடுகளில் இருந்த தொலைக்காட்சிப் பெட்டிகள் போன்ற உபகரணங்களையும் தம்முடன் அகதி முகாமிற்குள் கொண்டுவர முற்பட்டபோதும் பிரச்சினைகள் எழுந்தன.

சமையலும் பல பிரச்சினைகளை தோற்றுவித்திருந்தன. சிலர் கைகளில் அகப்பட்ட சில அசைவ உணவு வகைகளை கோயில் வளாகத்திற்குள் சமைக்க முற்பட்ட போது பிரச்சினைகள் ஏற்பட்டன.

மக்கள் தமது கடன்களைக் கழிப்பதிலும் பாரிய பிரச்சினைகள் ஏற்பட்டன.

பாடசாலைகளின் நிலமையும் இப்படித்தான் இருந்தது.

நான் கல்வி கற்ற பாடசாலை அதனால் எனக்கு முதலிடம் வேண்டும்| என்று ஒரு தரப்பினரும் ஆசிரியர் குடும்பங்களுக்கு தனி இடம் என்று ஒரு பிரிவினரும் அதிபரின் உறவினருக்கு தனி மண்டபம் என்று வேறு சிலரும் கூறிச் செயற்பட்டதால் பல சிக்கல்கள் எழுந்தன.

இதைவிட இந்தியன் கைகளால் சாவது மேல்|| என்று கூறி பலர் பாடசாலைகள் கோவில்களை விட்டு வெளியேறி தமது வீடுகளுக்கு திரும்பவும் சென்ற சந்தர்ப்பங்களும் இருந்தன.

தாக்குதல்களுக்கு உள்ளான அகதி முகாம்கள்:

இத்தனை கஷ்டங்களுடன் மக்கள் அடைக்கலமாகி இருந்த அகதி முகாம்களையும் கூட இந்தியப் படையினர் விட்டுவைக்கவில்லை என்பதுதான் மிகப் பெரிய கொடுமை.

20.10.1987 அன்று சுண்டுக்குழி மகளிர் கல்லூரியில் நிரம்பி வழிந்த அகதிகள் மத்தியில் இந்தியப் படையினர் அடித்த ஷெல் ஒன்று விழுந்து வெடித்தது. பாடசாலை அதிபரும் அவரது குடும்பத்தினரும் தங்கியிருந்த இடத்தில்தான் அந்த ஷெல் விருந்து வெடித்தது. பாடசாலை அதிபர் அவரது மகனான ஒரு ஆசிரியர் உட்பட ஆறு பேர் பலியானார்கள். இருபதிற்கும் அதிகமானவர்கள் படுகாயம் அடைந்தார்கள்.

அகதிகள் நிரம்பி வழிந்த சென் ஜோன்ஸ் கல்லூரியை நோக்கியும் ஷெல் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன.

அகதி முகாமாக மாறியிருந்த யாழ் சென் பற்றிக்ஸ் கல்லூரியிலும் இந்தியப் படையினர் ஏவிய ஷெல் வந்து விழுந்ததில் அங்கு தஞ்சமடைந்திருந்த ஆறுபேர் கொல்லப்பட்டார்கள்.

நாவலர் மண்டப அகதி முகாம் மீது நடத்தப்பட்ட ஷெல் தாக்குதலில் ஐவர் கொல்லப்பட்டதுடன் ஏழு பேர் காயமடைந்தார்கள்.

சுண்டுக்குழி அகதிமுகாமை நோக்கிச் சென்றுகொடிருந்த அகதிகள் மீதும் இந்தியப் படையினர் தாக்குதல் நடாத்தினார்கள். பலர் கொல்லப்பட்டார்கள்.

தமிழ் மக்கள் அபயம் அடைந்திருந்த அகதி முகாம்கள் மீது இந்தியப் படையினர் மனித வேட்டை நடாத்திய சந்தர்ப்பங்கள் பல உள்ளன. உதாரணத்திற்கு கொக்குவில் இந்துக்கல்லூரி அகதி முகாமில் இந்தியப் படையினர் மேந்கொண்ட கண்மூடித்தனமான தாக்குதலில் 24 அகதிகள் துடிதுடித்து இறந்தார்கள்.

(25.10.1987 அன்று நடைபெற்ற இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் பற்றி பிறிதொரு சந்தர்ப்பத்தில் விரிவாகப் பார்ப்போம்).

பரவிய செய்தி:
இதேவேளை நல்லூர் கந்தசாமி கோயிலில் தஞ்சமடைந்திருந்த மக்களின் உயிர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் ஒரு செய்தி யாழ் குடாவெங்கும் பயங்கரமாகப் பரவிக்கொண்டிருந்தது.

அந்தச் செய்தி படிப்படியாக இந்தியப் படையினரையும் வந்தடைந்தது.

புலிகளின் தலைவர் பிரபாகரன் நல்லூர் கந்தசாமி கோயிலினுள் மக்கள் மத்தியில் மறைந்து தங்கியிருக்கின்றார்| - என்பதே அந்தச் செய்தி.


பேஸ் புக்கில் உங்கள் விருப்பத்தை தெரிவித்து எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள் உறவுகளே.
இத்தளத்தின் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற தங்கள் மின்னஞ்சல் முகவரி கீழே பதிவு செய்யவும்