ஈழம்

ஈழம்

வியாழன், 20 ஜனவரி, 2011

பிரபாகரன் 21ம் நூற்றாண்டின் இணையற்ற சாதனையாளன்.

தமிழ் இலக்கியத்திலே உலக இலக்கியத்தின் இலக்கைத்தொட்ட மகாகவிகள் பலர்: எழுத்துத்துறையிலே, தமிழ் மொழியைக் காத்தவர்கள் - வளர்த்தவர்கள் என்று வந்துகொண்டே இருக்கிறார்கள்.



நாடு பிடிக்கும் நாட்டத்தோடு வலிமைமிக்க சரித்திர நாயகர்களாக, வரலாற்றில் நிரந்தர இடம் பிடித்த பெருமைக்குரிய தமிழ் மன்னர்கள் பலர். ஆனால்...அழிந்து விடுமோ என்ற அச்சத்தின் அங்கலாய்ப்பில் உள்ள தமிழ் இனத்திற்கு அபயமாக, ஒரு விடிவெள்ளியாக, தமிழனுக்கு என்று ஒரு நாட்டை உருவாக்க இளமையிலேயே புயலாகப் புறப்பட்ட வேங்கையே பிரபாகரன். உலகெங்கும் வாழுகின்ற தமிழருக்குப் புது இரத்தம் பாய்ச்சுகின்றவன் பிரபாகரன். தாழ்ந்து போன தமிழினத்தைத் தலைநிமிரவைத்தவன் பிரபாகரன்.

முதுகொடிந்த தமிழினத்தின் முள்ளந்தண்டை நிமிர்த்திக் காட்டியவன் பிரபாகரன். ‘சாகும்வரை சமர்தான்' என்று விண்ணதிரும் குரலோடு விஸ்வரூபம் எடுத்திருப்பவன்
பிரபாகரன் மட்டுமே. வடக்குக் கிழக்குத் தமிழரின் விடுதலைக்கு மட்டுமன்றி வந்தேறு குடிகளென வசைபாடப்பட்ட இந்தியத் தமிழரான மலையகத் தமிழருக்கும் தோள்கொடுக்கத் துணிந்திருப்பவன் பிரபாகரன். உள்நாட்டுத் தமிழரை ஒன்றிணைத்தது மட்டுமன்றி உலகத் தமிழரையும் ஒன்றிணைக்கும் உணர்வுகளை ஊட்டி வருபவன் பிரபாகரன்.

50 வருட வாழ்வல்ல வரலாறு - 20 வருட ‘காலத்தை வென்ற' எதிர் நீச்சல் மட்டுமல்ல எதிர்காலச் சரித்திரம். வரலாறு என்பது எல்லையற்றது. அதில் வாழ்பவர்களும் மடிபவர்களும் கோடான கோடி. அதில் அழிக்கமுடியாதபடி கால்பதித்து, காலத்தை வென்று, நிரந்தர இடத்தைத் தனதாக்கிக் கொள்பவர்கள் சிலரே. அந்த இடத்தைப் பிரபாகரனுக்கு மாத்திரம் என்று தனியாக ஒதுக்கிக் கொண்டது தமிழர் சரித்திரம். சரித்திரத்தையே மாற்றிக் காட்டும் மாபெரும் பிரமிக்கும் சக்தியாகத் தமிழரால் இனம் காணப்பட்டவனே பிரபாகரன். அவன் இன்னும் பல்லாண்டு வாழ்வான்! தமிழையும் தமிழனையும் வாழ வைப்பான்!


தலைவர்,
மலையக மக்கள் விடுதலை முன்னணி,
நாடாளுமன்ற உறுப்பினர், இலங்கை.
பெ.சந்திரசேகரன்



இத்தளத்தின் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற தங்கள் மின்னஞ்சல் முகவரி கீழே பதிவு செய்யவும்

Image Hosted by ImageShack.us