ஈழம்

ஈழம்

வெள்ளி, 18 மார்ச், 2011

பல களமுனைகளில் வெற்றியை அள்ளித்தந்த கேணல் இளங்கீரனின் வீரவணக்க நாள் இன்றாகும்.

கேணல் இளங்கீரன் 
தமிழீழம்(மட்டக்களப்பு மாவட்டம்)
வீர மரணம்: 19.03.2009


வன்னியில் ஸ்ரீலங்கா படையினருடன் நடைபெற்று வந்த இறுதி சண்டைகளின் போது 19.03.2009 அன்று விடுதலைப்புலிகளின் சமர்க்கள தளபதிகளில் ஒருவரான இளங்கீரன் வீரச்சாவடைந்தார். 

சேட்டன் என அழைக்கப்படும் கேணல் இளங்கீரன் தமிழீழம் மட்டக்களப்பு மாவட்டத்தை பிறப்பிடமாக கொண்டவர். நீண்ட காலம் இம்ரான் - பாண்டியன் படையணியில் பணியாற்றியவர்.

நிறைய சமர்க்களங்களை சந்தித்தவர் லெப்.கேணல் அக்பரின் தலைமையில் லெப்.கேணல் விக்ரர் கவச எதிர்ப்பு அணி செயற்ப்பட்ட காலத்தில் அவ்வணியின் தாக்குதல் தளபதிகளில் ஒருவராக பணியாற்றியவர்.

ஓயாத அலைகள் - 3 படை நடவடிக்கையின் போது தமிழீழம் யாழ் மாவட்டம் குடாரப்பில் தரையிறங்கிய புலியணிகள் இத்தாவிலில் பிரிகேடியர் பால்ராச்சின் தலைமையில் எதிரியுடன் சண்டையிட்ட போது விக்ரர் கவச எதிர்ப்பு அணியையும் சமர்க்களத்தின் ஒரு பகுதியையும் வழி நடத்தியவர் கேணல் இளங்கீரன் ஆவார்.தமிழீழ தாயக விடுதலைக்காகவும் எம் மக்களின் விடிவுக்காகவும் எதிரியுடன் போராடி மடிந்த கேணல் இளங்கீரன் மற்றும் இதே நாளில் வீரச்சாவடைந்த ஏனைய மாவீரர்களுக்கும் எங்கள் வீர வணக்கத்தை தெரிவித்து கொள்கின்றோம்.

தமிழீழம் கிடைக்கும் வரை உங்களை நிச்சயம் தொடர்வோம்.

Image Hosted by ImageShack.us

பேஸ் புக்கில் உங்கள் விருப்பத்தை தெரிவித்து எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள் உறவுகளே.

இத்தளத்தின் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற தங்கள் மின்னஞ்சல் முகவரி கீழே பதிவு செய்யவும்