ஈழம்

ஈழம்

சனி, 12 மார்ச், 2011

மாவீரர்களுக்கு சமர்ப்பணம்.


தலைவன் வளர்த்த நாற்று மேடையில் 
நம்பிக்கை கொடிகள் இவர்கள்.
இப்படி வேர் அறுந்து போகும் – என 
எவர் நினைத்தார். 
ஈழக்கனவுடன் மாண்ட – எம் 
மறவர்களை நெஞ்சில் நிறுத்தி 
நிமிர்ந்து செல்லுவோம் மாண்ட – எம் 
கனவுகளை மீட்டு எடுப்பதற்காய்.

எடுக்க எடுக்க தீராது வருகிறது 
இவர்கள் தொடுத்த சாதனைச்சரம.; 
எத்தனை களங்கள் 
எத்தனை சாதனைகள் 
எத்தனை விழுப்புண்கள் – ஆயினும் 
இவர்கள் வாழ்வு முழுவதனையும் 
வரலாராய் மாற்றியவர்கள் 
மறக்குமா……………….? 
ஈழத்தவர்களின் மனங்களில் 
இவர்கள் நினைவுகள்.

நயவஞ்சக கூட்டத்தை 
நல்ல படி வாழ வைத்து விட்டு 
தமிழரின் நலனே 
தனது நலன் என தமிழுக்காய் வாழ்ந்தவரை 
தரணியை விட்டு அழைத்துக்கொண்டாய் 
இதுவா உன் நீதி – இல்லை 
எம் இனத்துக்காய் இறைவா நீ 
கொடுத்த அநீதி.

விழுப்புண் வந்து வீழ்ந்தபொழுதிலும் 
களமுனையைத்தான் 
இவர்கள் கருத்தில் கொண்டார்கள். 
எம் மண்ணை துண்டாட நினைத்து 
பகை வந்துபோது 
பண்டாரவன்னியனைப்பார்த்தோம் 
இவர்கள் முகத்தில்.

நந்தி கடலினுள் நாச்சியார் எறிந்த 
சலங்கையையும் நீதி வாளையும் 
மீட்டெடுத்த எங்கள் பொரும் தலைவன் 
இவர்களிடமே பரிசளித்தான்.

தேசத்தின் குரல் வீழ்ந்த போது 
உலகினில் தடக்கினோம். 
தமிழ்ச்செல்வன் மீது சாவு வீழ்ந்த போது 
சிரிப்பின் சாதனைச் சாம்பிராயத்தில் தடக்கினோம். 
சாவுக்குள் சாள்ஸ்ஸை கொடுத்த போது 
வீரத்தின் விழுதென்றை இழந்தோம். 
அன்று தொட்டு இன்று வரை 
ஆயிரமாயிரம் வீரர்களை இழந்தோம். – ஆயினும் 
நாம் தளரோம்.

-சுவிஸ்ஸிலிருந்து குட்டிசுபா

Image Hosted by ImageShack.us


பேஸ் புக்கில் உங்கள் விருப்பத்தை தெரிவித்து எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள் உறவுகளே.

இத்தளத்தின் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற தங்கள் மின்னஞ்சல் முகவரி கீழே பதிவு செய்யவும்