ஈழம்

ஈழம்

ஞாயிறு, 13 மார்ச், 2011

அடைக்கலம் தந்த வீடுகளே....அடைக்கலம் தந்த வீடுகளே
போய் வருகின்றோம் நன்றி -நெஞ்சை
அடைக்கும் துயர் சுமந்து செல்கின்றோம் -உங்கள்
அன்புக்கு புலிகள் நன்றி

நாங்கள் தேடப்படும் காலத்தில் நீங்கள்
கதவு திறந்தீர்களே -எம்மை
தாங்கினால் வரும் ஆபத்தை எண்ணி
பார்க்க மறந்தீர்களே
பார்க்க மறந்தீர்களே...பார்க்க மறந்தீர்களே..

எங்கள் உடல்களில் ஓடும் செங்குருதி
உங்கள் சோறல்லவா உங்கள் சோறல்லவா -நாங்கள்
தங்கியிருந்த நாள் சிலநாள் என்றாலும்
நினைவு நூறல்லவா
நினைவு நூறல்லவா...நினைவு நூறல்லவா...

பெற்றோரை உறவை பிரிந்திருந்தோம் -அந்த
இடைத்தை நிறைத்தீர்களே -மாற்றான்
முற்றுகை நடுவில் மூடியெமையுங்கள்
சிறகால் மறைத்தீர்களே
சிறகால் மறைத்தீர்களே...சிறகால் மறைத்தீர்களே.

Image Hosted by ImageShack.us

இத்தளத்தின் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற தங்கள் மின்னஞ்சல் முகவரி கீழே பதிவு செய்யவும்