ஈழம்

ஈழம்

வியாழன், 24 மார்ச், 2011

விடுதலைப் புலிகளைத்தேடி, தமிழகம் நோக்கி சிறீலங்காப்படையின் சிறப்பு புலனாய்வு அணி.

இந்தியாவின் தமிழகம் நோக்கி சிறீலங்காப்படையின் சிறப்பு புலனாய்வு அணி ஒன்று நகர்த்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மைய காலத்தில் சிறீலங்காவின் பிரதமர் தமிழகத்தில் விடுதலைப்புலிகள் இயங்கிவருவதாக தெரிவித்துள்ள நிலையில், தற்போது தமிழகத்தில் உள்ள ஈழத்தமிழ் ஆதரவாளர்களின் நடவடிக்கைகளினை கண்காணிக்கும் நோக்கிலும், தமிழகத்தில் அகதிகளாக வாழ்ந்து கொண்டிருக்கும் ஈழத்தமிழ் மக்களின் விபரங்களை திரட்டி அவர்களது ஜரோப்பிய மற்றும் பிரித்தானிய உறவுகளின் நடவடிக்கைகளினை முடக்கும் முகமாகவும், தமிழகத்திற்கான சிறீலங்காப்படையின் சிறப்பு புலனாய்வு அணியினர் நகர்த்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இவர்களின் நகர்வுகள் தொடர்பாக தமிழகத்தில் இடங்களின் தெரிவுகள் இடம்பெற்றுள்ளதாகவும் இதற்காக தமிழகத்தில் பல தமிழ் முதன்மையாளர்கள் விலைக்கு வாங்கப்பட்டுள்ளதாகவும் புலனாய்வு தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தில் சிறப்பாக தெரிவு செய்யப்பட்ட இடங்களில் இவர்கள் விமானம் மூலம் வந்து நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களின் புலனாய்வு நடவடிக்கைக்காக ஏற்கனவே தமிழ் துரோகிகள் சிலர் விலைக்கு வாங்கப்பட்டு தூங்கு நிலை புலனாய்வாளர்களால் தமிழகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது மேலும் சில நடவடிக்கைகளுக்காக வதை முகாமில் தடுத்துவைக்கப்பட்டுள்ள முன்னாள் போராளிகள் சிலர் முகம் மாற்றப்பட்ட நிலையில் சிறீலங்காப்படை புலனாய்வு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நடவடிக்கையினை போத்தபாயவே நேரடியாக கண்காணிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இத்தகவல் தொடர்பாக தமிழகத்தில் வாழும் உறவுகளும், புலம்பெயர் உறவுகளும் மிகவும் விழிப்பாக இருக்குமாறு அவதானிகள் எச்சரிக்கின்றனர்.


Image Hosted by ImageShack.us

இத்தளத்தின் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற தங்கள் மின்னஞ்சல் முகவரி கீழே பதிவு செய்யவும்

Image Hosted by ImageShack.us