தம்பியின் தம்பி சீமானே!
சிறையிலடைத்தும் சிதையாத சீமானை
சிறுக்கியை வைத்து சிதைக்கப் பார்கிறது!! ஒரு
சின்னக் கூட்டம் இங்கே……..
முடியாது.. முடியாது… ஒரு போதும் முடியாது,
இவர்களின் எண்ணம் கனவிலும் நடவாது.
இச்செய்தி கேள்வியுற்ற மறுநொடியே
எள்ளி நகையாடினர் உலகத் தமிழர்கள்!
சீமானைப் பார்த்தல்ல…. சிறுக்கியின் பின்னால்
ஒழிந்து நிற்கும் கோழைகளைப் பார்த்து…
சிங்களத்தின் சமர்மேகம் வன்னியெங்கும் சூழ்ந்திருக்க..
இந்தியத்தின் கடற்படை எட்டப்பன் வேலை பார்க்க…
அன்று அலையடிக்கும் கடல் நடுவே வெறும் சீமானாக
புலித்தம்பிகள் துணை கொண்டே புறப்பட்டான் !!
புலித் தலைவனின் அழைப்பை ஏற்று.
நொடிக்கு ஒருமுறை குண்டு மழை!
ஐந்து நிமிடத்திற்கு ஓரிடம் ! - என
யுத்த களம் நெருப்பாய் தகித்த போதும்
எந்தலைவன் பக்கத்தே நின்றதனால்
செந்தமிழன் சீமான் ஆனான்.
அன்றொருநாள் யுத்தக்களத்தின் நடுவே
கண்ணன் உரைத்தான் கீதையினை
இன்றோ வன்னிக் களத்தே நம்
அண்ணன் உரைத்தான் புலிகள் திட்டத்தை
செந்தமிழன் சீமானிடத்தே.
வீழ்ந்து வெடிக்கும் குண்டுச் சிதறல்களுடன்
தமிழர் சதைத் துண்டங்கள்
சிதறியதை கண்டான் வெற்றுக் கண்களால்
அஞ்சி நடிங்கிவிடவில்லை…..
மிஞ்சும் புலியாக உங்களுடனே
மரித்துவிடுகிறேன் என்றான் !
தலைவனிடத்தே இந்த சீமான்.
சுயநலப் பேயினால் கட்டுண்டு தடம்மாறிப்
பயணப்படுகிறது தமிழ்ச்சாதி,
யாவருக்குமாய் நாடமைத்திட இரவுபகல் பாராது
களமாடுகின்றான் எம் தலைவன் பிரபாகரன்.
இனம் அழிந்தாலும் தன் குடும்பம் வாழ்ந்தால் போதும்
என்றான் ஒரு ஈனத்தலைவன் !
குடும்பமே பொருட்டல்ல இனத்தின் விடியல்தான்
அதிமுக்கியம் என்றுரைத்தான் எம் இனத்தலைவன்; ! !
இராம காவியத்தில் அசோக வனத்தின் நடுவே
“கண்டேன் அன்னையை” என்றான் அனுமன் அன்று,
ஈழகாவியத்தில் குண்டு மழை நடுவே
“கண்டேன் அண்ணனை” என்றான் சீமான் இன்று.
அனல் தெறிக்கும் களத்தின் நடுவே…
பொறி பறக்கும் குண்டுகளிடையே…
தமிழினத்தின் தனிப்பெரும் தலைவனாக பிரபாகரனை
கன்டான் இந்த தம்பியின் தம்பி சீமான் !
தலைவன் வகுத்த பாதையிலே நடை போடுகின்றான்
இந்த தம்பியின் தம்பி சீமான்…..
கற்களும் முற்களும் விடுதலைக்கான பயணத்தை ரணமாக்க
சிம்மக்; குரல்கொண்டே விடுதலை விதைத்தூவி
வீறுகொண்;டு நடைபோடுகின்றான் புலித்தலைவனின் தம்பி சீமான்.
ஈழத் தம்பிகள்.