தேசியத் தலைவர் அவர்கள் சிறந்த திரைப்பட ரசிகர் என்பது நாடறிந்த விடயம். அவர் கூடுதலாகத் தமிழ், ஆங்கிலத் திரைப்படங்களைப் பார்ப்பார். இது அவருடைய சிறு வயதில் தொடங்கிய பழக்கம். அந்தக் கால யாழ்குடா நாட்டில் ஆங்கிலப் படங்கள் யாழ் நகர் றீகல் தியேட்டரில் மாத்திரம் காட்டப்பட்டன.
தனது வல்வெட்டித்துறை வீட்டிலிருந்து பன்னிரண்டு மைல்தூரம் மிதிவண்டியில் அவர் ஆங்கிலப் படம் பார்க்க யாழ் நகர் வருவார். அனேகமாக ஒரு நண்பனையும் ஏற்றிக்கொண்டு வருவார். அவருக்கு மிதிவண்டி ஓட்டம் நன்றாகப் பிடிக்கும். வயது வந்த பிறகு அவருக்கு மிதிவண்டியில் பயணிக்க வசதி கிடைக்கவில்லை.
ஆங்கிலப் படங்களில் சண்டைப் படங்களுக்கு ஆரம்ப காலத்தில் அவர் முக்கியத்துவம் கொடுத்தார். பிறகு படிப்படியாக அவருடைய ரசனைகள் விரிவடைந்தது. அப்போது நியாயம், நீதிக்காகவும், சமூகத்தால் ஒதுக்கப்பட்ட வலுவற்றோருக்காகவும் போராடும் கதாநாயகர்களின் படங்களைப் பார்ப்பார்.
தமிழ்ப் படங்களை அவர் விட்டு வைக்கவில்லை. முன்பு பட மாளிகைகளில் படம் பார்த்தவர் காலப் போக்கில் வீடியோவில் தமிழ், ஆங்கில படங்களைப் பார்ப்பார். அவருடைய வாழ்க்கையில் திரைப்படங்கள் பெரும் பங்கு வகித்தன. அவர் மிகவும் துல்லியமான விமர்சனக் கண்ணோட்டத்துடன் பார்த்தார்.
தமிழ்த் திரைப்படங்கள் பற்றிய அவருடைய பொதுவான விமர்சனம் பின்வருமாறு. மேடை நாடகப் பாரம்பரியத்தில் இருந்து தமிழ்த் திரைப்படத்தால் விலகிச் செல்ல முடியவில்லை. என்ன விதப் புதுமையைப் புகுத்தினாலும் நாடகச் சாயல் தொடர்கின்றது என்று அவர் சொல்வதுண்டு.
என்றாலும் அவர் தமிழ்ப் படங்களுக்கு முக்கியத்துவம் அளித்தார். வன்னியில் போராட்டத் தயாரிப்புக்களில் ஈடுபடும் ஆரம்ப காலத்தில் அவருக்கு அடிக்கடி மலேரியா குரப்பன் காய்ச்சல் வருவதுண்டு. நடுங்கிக் கொண்டு படுக்கையில் கிடவாமல் தடித்த போர்வையால் உடலைப் போர்த்திக் கொண்டு வீடியோ பேழையில் படம் பார்ப்பார்.
குடும்ப உறவுகளுக்கு இடையிலான ஆசாபாசங்கள், விருப்பு வெறுப்புக்கள், அடிதடிகள், நடனம், பாட்டு, அழுகை, கண்ணீர், தனியொருவன் ஐம்பது பேரை அடித்து விரட்டும் காட்சிகள் இவை தானா தமிழ்ப்படங்கள் என்று அவர் கேட்பார். ஆனால் சலிப்புற்றுத் தமிழ்ப்படம் பாராமல் விட்டதில்லை.
ஆங்கிலக் கதாநாயகர்களில் அவருக்கு கிளின்ற் ஈஸ்ற்வூட் (Clint Eastwood) அவர்களை மிகவும் பிடிக்கும். பிற்காலத்தில் கலிபோர்னியா அரசியலில் தடம் பதித்த சிளின்ற் ஈஸ்ற்வூட் நியாயம், நீதிக்காகத் தனியொருவனாக இடுப்பில் கைத்துப்பாக்கியுடன் படங்களில் போராடுவார்.
நிஜ வாழ்க்கையிலும் அவருக்கு இந்த இயல்பு இருந்தது. தேசியத் தலைவர் நன்கு வளர்ச்சி பெற்ற காலத்தில் பிரபாகரன் தனது தீவிர ரசிகன் என்பதை கிளின்ற் ஈஸ்ற்வூட் அறிந்தார். இதன் காரணமாக இருவருக்கும் இடையில் நட்பு ரீதியான கடிதப் போக்குவரத்து இருந்தது.
சுப்பர்மேன் (Superman) வேடத்தில் நடித்த Steve Reeves என்ற நட்சத்திர நடிகரின் சகாசங்கள் தேசியத் தலைவருக்கு உவகை ஊட்டின. புகழின் உச்சியில் இருந்தபோது குதிரைச் சவாரி விபத்தில் இந்த நடிகர் முதுகுத் தண்டில் காயமுற்று நடக்க முடியாமல் படுத்த படுக்கையில் கிடந்தார்.
போராட்ட வாழ்வில் முதுகில் காயமுற்ற போராளிகள் சக்கர நாற்காலியில் தமது வாழ்க்கையை நடத்தியபோது அவர் நடிகர் Steve Reeves பற்றி அவர்களுக்குச் சொல்வார். ஆண் அழகனும், பலகோடி பணத்திற்கு அதிபதியுமான Steve Reeves சின் படங்களிலும் பார்க்கத் தனிப்பட்ட வாழ்க்கை அவரைப் பெரிதும் பாதித்தது.
Steve Reeves அகால மரணம் அடைந்த போது மனைவி டனாவுக்கு அவர் ஆறுதல் செய்தி அனுப்பினார். படங்களில் நடிக்கும் போது படுகாயம் அடையலாம் என்பதற்கு Steve Reeves வாழ்க்கை சிறந்த உதாரணம்.
நிஜ வாழ்விலும் திரை வாழ்விலும் சிறிதளவும் வித்தியாசம் இல்லாமல் வாழ்ந்தவர் என்று ஹொலிவூட் முன்னணி நட்சத்திரம் கிரகரி பெக் (Gregory Peck) பற்றி தேசியத் தலைவர் குறிப்பிடுவார். கனவான் நடிகர்கள் தலைமுறையினரான கிரகரி பெக் நடிப்பிலும் வாழ்விலும் நேர்மையும், உதார குணமும் படைத்தவராகச் சிறப்புற்றார்.
தேசியத் தலைவர் பிரபாகரனின் திரைப்பட ரசனையில் இருந்து அவருடைய குண இயல்புகளை மதிப்பிட முடியும். அவர் முழுமையான மனிதன், கலைகளை நேசித்தவர். பிறரையும் அதில் ஊக்குவித்தார். விடுதலைப் புலிகளின் கலை பண்பாட்டுப் பிரிவை உருவாக்கி உன்னத நிலைக்கு வளர்த்தவர்.
வெற்றி நமதே வெற்றி நமதே எங்கள் அண்ணா புறப்படு நீயே எதிரியை அழித்து எங்களை காக்க வீறு கொண்டு வா வா வா.
பாடல்