ஈழம்

ஈழம்

செவ்வாய், 1 நவம்பர், 2011

தளபதி லெப்.கேணல் இனியவன் உட்பட 19 மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.

ஓயாத அலைகள் 3 பாரிய படை நடவடிக்கையில் ஒட்டுசுட்டான் படைத்தளம் மீதான தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதி லெப்.கேணல் ராகவன், தளபதி லெப்.கேணல் இளையவன்(நியூட்டன்) உட்பட்ட மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.

02.11.1999 அன்று தொடங்கப்பட்ட ஓயாத அலைகள் 3 படைநடவடிக்கையின் வெற்றிக்கு அடித்தளமிட்ட ஒட்டுசுட்டான் படைத்தள வீழ்ச்சிக்காக  தம்மை ஆகுதியாக்கிய சிறப்புத் தளபதி லெப்.கேணல் ராகவன்,  தளபதி லெப்.கேணல் நியூட்டன், மேஜர் சாரங்கன்(ஆறுமுகம் கதீபன்), கப்டன் ஜீவராசா(விசுவலிங்கம் சசிக்குமார்), லெப்.இருதயன்(வில்விறட் சுதேசன்), லெப். தரன்(தர்மு செல்வம்), லெப். செல்லத்தேவன்(பழனியாண்டி விமலன்), 2ம் லெப்.வண்ணன் (நல்லையா ரகுசீலன்), 2ம் லெப்.சூசை(சரவணமுத்து சதீஸ்), 2ம் லெப். புரட்சிமதி(கந்தையா அஜந்தன்), 2ம் லெப். நல்கீரன்(லோகநாதன் தவராசா), வீரவேங்கை இசைவேந்தன்(செல்வராசா நிசாந்தன்) ஆகிய சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி வீரர்கள் உட்பட்ட அனைத்து மாவீரர்களிற்கும் எங்கள் வீரவணக்கங்கள்.
இதே நாள் 02.11.2000 அன்று முல்லைக் கடற்பரப்பினூடாக மேற்கொள்ளப்பட்ட வழங்கல் நடவடிக்கையை முறியடிக்க வந்த சிறிலங்கா கடற்படையின் சுற்றுக்காவல் கலங்களை வழிமறித்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட 7 மாவீரர்களின்  வீரவணக்க நினைவு நாள் இன்றாகும்.தமிழீழ தாயக விடுதலைக்காய் தமது இன்னுயிரை ஈந்த இந்த வீரமறவர்களிற்கு எங்கள் வீரவணக்கங்கள். இதே நாளில் வீரச்சாவைத் தழுவிய ஏனைய மாவீரர்களிற்கும் எங்கள் வீரவணக்கங்கள்.

Image Hosted by ImageShack.us


இத்தளத்தின் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற தங்கள் மின்னஞ்சல் முகவரி கீழே பதிவு செய்யவும்