தமிழீழ தாயக விடுதலைக்காகவும் தமிழீழ மக்களின் விடிவுக்காகவும் 04.11.2000 அன்று திருகோணமலைத் துறைமுக வாயிலில் வைத்து சிறிலங்கா கடற்படையின் டோறா அதிவேக பீரங்கிக் கலத்தினைச் சேதமாக்கி வீரச்சாவைத் தழுவிக் கொண்ட கடற்கரும்புலிகள் லெப்.கேணல் நரேஸ், மேஜர் சுடர்மணி(செங்கதிர்) ஆகியோரின் வீரவணக்க நாள் இன்றாகும்.
இதே நாள் 04.11.1999 அன்று ஓயாத அலைகள் 3 படைநடவடிக்கையில் ஒதியமலை பகுதி மண் மீட்பின் போதான சமரில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட விக்ரர் கவச எதிர்ப்புப் படையணியின் தளபதிகளில் ஒருவரான லெப்.கேணல் மணிவண்ணனின் நினைவு நாளும்,
இதே நாள் 04.11.2007 அன்று வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் அசோக்குமாரின் 4ம் ஆண்டு நினைவு நாளும் இன்றாகும்.
ஓயாத அலைகள் - 3 படைநடவடிக்கையில் 04.11.1999 அன்று வீரச்சாவைத் தழுவிக் கொண்ட சாள்ஸ் அன்ரனி படையணியைச் சேர்ந்த மேஜர் இராசநாயம், லெப். ஆருரான், 2ம். லெப். திருக்குமரன் 2ம் லெப். வல்லவன், 2ம் லெப். சுபாசன், வீரவேங்கை தீபன் ஆகிய மாவீரர்களின் நினைவு நாளும் இன்றாகும்.
தமிழீழ தாயக விடுதலைக்காய் தமது இன்னுயிரை ஈகம் செய்த
இந்த வீரமறவர்களிற்கு எங்கள் வீரவணக்கங்கள். இதே நாளில் வீரச்சாவைத் தழுவிய ஏனைய மாவீரர்களிற்கும் எங்கள் வீரவணக்கங்கள்.
தமிழீழம் கிடைக்கும் வரை உங்களை நிச்சயம் தொடர்வோம்.
இந்த வீரமறவர்களிற்கு எங்கள் வீரவணக்கங்கள். இதே நாளில் வீரச்சாவைத் தழுவிய ஏனைய மாவீரர்களிற்கும் எங்கள் வீரவணக்கங்கள்.
தமிழீழம் கிடைக்கும் வரை உங்களை நிச்சயம் தொடர்வோம்.