11.12.2001ம் ஆண்டு திருகோணமலை மாவட்டம் பாலத்தோப்பூர் பகுதியில் அமைந்திருந்த சிறிலங்கா படை முகாம் மீதான தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் மனோஜ் உட்பட்ட நான்கு மாவீரர்களினதும் வாழைச்சேனை செற்றடி காவல்துறை நிலையம் மற்றும் படை முகாம் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட 10 மாவீரர்களினது நினைவு நாள் இன்றாகும்.
பாலத்தோப்பூர் சிறிலங்கா படை முகாம் தாக்குதலில் லெப்.கேணல் மனோஜ் (பாலசிங்கம் வந்தகுமார் - உவர்மலை. திருகோணமலை), மேஜர் குமாரவேல் (செல்வராசா ஆனந்தன் - மாமாங்கம், மட்டக்களப்பு), லெப். கலைமதி (செல்வநாயகம் தர்சினி - மூதூர், திருகோணமலை). 2ம் லெப்.தேவன் (கென்றி செபஸ்ரியான் - மூதூர், திருகோணமலை) ஆகிய போராளிகள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர்.
இதேபோன்று மட்டக்களப்பு வாழைச்சேனை செற்றடி சிறிலங்கா காவல்துறை நிலையம் மற்றும் படைமுகாம் மீதான தாக்குதலின் போது
கப்டன் சற்குணராஜ் (தம்பிப்பிள்ளை மதியழகன் - மத்தியமுகாம், அம்பாறை)
கப்டன் பிரதாவரன் (இராசையா சற்குணம் - மல்வத்தை 2, அம்பாறை)
கப்டன் மணிராஜ் (சிங்காரவேல் கமலேந்திரராசா - வாகரை, மட்டக்களப்பு)
லெப்.மணியரசன் (குமாரசூரியம் ரவிச்சந்திரன் - சித்தாண்டி, மட்டக்களப்பு)
லெப். முகுந்தன் (நடராசா யோகேஸ்வரன் - விநாயகபுரம், அம்பாறை)
2ம் லெப். உமாகரன் (சிவசம்பு சசிக்குமார் - கரடியனாறு, மட்டக்களப்பு)
2ம் லெப். வினோகரன் (சதாசிவம் சௌந்தராஜன் - நெடியமடு, மட்டக்களப்பு)
2ம் லெப். மணிகண்ணன் (கணேஸ் சண்முகநாதன் - சந்திவெளி, மட்டக்களப்பு)
2ம் லெப். முகுந்தனன் (அழகப்பொடி ஜெயகாந்தன் - புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு)
2ம் லெப். மணிப்பிறை மகேந்திரன் மகேஸ்வரன் - கரடியனாறு, மட்டக்களப்பு)
ஆகிய போராளிகள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர்.
தமிழீழ தாயக விடுதலைக்காய் தமது இன்னுயிரை ஈகம் செய்த இந்த வீரமறவர்களிற்கு எங்கள் வீரவணக்கங்கள். இதே நாளில் வீரச்சாவைத் தழுவிய ஏனைய மாவீரர்களிற்கும் எங்கள் வீரவணக்கங்கள்.
தமிழீழம் கிடைக்கும் வரை உங்களை நிச்சயம் தொடர்வோம்.