ஈழம்

ஈழம்

வெள்ளி, 6 ஜனவரி, 2012

மாவீரர்கள் – மணம் வீசும் பூக்கள்!


ஈழம் எங்கள் நாடடா ஈன்ற அன்னை தமிழடா!
நாடு எங்கள் கண்ணடா வீரம் எங்கள் நெஞ்சடா!
மானம் காத்த மறவர் எங்கள் மடிவில் நூறு கதையடா!
வானம் கூட எம்மைக்கண்டு வியந்த காலம் உண்டடா!

கானகமும் எம்மை காத்த கதைகள் உண்டு கேளடா!
எங்கள் மண்ணில் நாங்கள் வாழும் வாழ்வு கண்ட பேரடா
வாழவேண்டும் ஈழவன் போல் எண்று சொன்னதுண்டடா!
எம் இனத்தின் ஆணி வேரை அறுத்து விட எண்ணியே

சிங்களமும் சிந்தை கொண்டு செய்த பாவம் நூறுடா!
பார்த்துப் பார்த்து அன்னை ஈன்ற பிஞ்சுகளை கூடடா
சிங்களம் தன் காலில் இட்டு கசக்குவதும் உண்டடா!
எம்மைக்காக்க அவதரித்த உத்தமன் நம் அண்ணண்டா!

அண்ணண் வழி பாதையிலே அண்ணண் அக்கா பலரடா!
வீரம் எண்ற வார்த்தை கூட இவரை கண்ட பின்னடா
வீறு கொண்டு வேங்கையாக வாழ்த்துச் சொன்னதுண்டடா!
மெழுகுவர்த்தி கூட எங்கள் அண்ணண் அக்கா முன்னிலே

நெஞ்சுருகி தலை சாய்த்து நன்றி கூறும் கேளடா!
இவர்தனை போல் பாரதநில் தியாகி உண்டோ சொல்லடா!
இவரைக் கொண்ட எமது மண்ணை நாம் இழக்கலாகுமோ?
இவரைக் கொன்ற அரக்கர்தனை நாம் மறக்கக் கூடுமோ?

இறக்கவில்லை நீங்கள் எங்கள் உயிர்கள் அண்ணண் அக்காவே!
புதைய வில்லை நீங்கள் மண்ணில் விதைக்கப்பட்ட விதைகளே!

மலரும் வரை ஈழம் எங்கள் பாதை உங்கள் பாதையே!
மலர்ந்த பின்னும் மனதில் நீங்கள் மணம் வீசும் பூக்களே!
எங்கள் மனம் தேடும் பூக்களே! வீர உரம் போடும் நூல்களே!
வாழ்க தமிழ்! மலர்க தமிழ் ஈழம்.

ஈழன் இளங்கோ
சிட்னி- அவுஸ்திரேலியா

Image Hosted by ImageShack.us


இத்தளத்தின் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற தங்கள் மின்னஞ்சல் முகவரி கீழே பதிவு செய்யவும்

Image Hosted by ImageShack.us