ஈழம்

ஈழம்

புதன், 12 செப்டம்பர், 2012

லெப்.கேணல் செந்தமிழ்ச்செல்வன்,சிவகாமி உட்பட பல மாவீரர்களின் நினைவு நாள் இன்று.

“ரணகோச – 5” முன்னகர்வு முறியடிப்பின்போது காவியமான 23 மாவீரர்கள், நல்லூரில் காவியமான  லெப்.கேணல் செந்தமிழ்ச்செல்வன் உட்பட 12.09.1999 அன்று வீரச்சாவைத் தழுவிய 28 மாவீரர்களின் வீர வணக்க  நினைவு நாள் இன்றாகும்.

லெப்.கேணல் செந்தமிழ்ச்செல்வன் உட்பட்ட 28 மாவீரர்களின் வீரவணக்க நாள்.

12.09.1999 அன்று “ரணகோச -5” நடவடிக்கை மூலம் மன்னார் மாவட்டத்தின் சிராட்டிக்குளம், பள்ளமடு மற்றும் பெரியமடுப் பகுதிகளை வல்வளைக்கும் நோக்குடன் சிறிலங்கா படைகளால் முன்னெடுக்கப்பட்ட பாரிய படை நகர்வு விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டது. இதன்போது 50ற்கும் மேற்பட்ட படையினர் கொல்லப்பட்டதுடன் 700ற்கும் மேற்பட்ட படையினர் படுகாயமடைந்தனர்.

இந்த வெற்றிகர முறியடிப்புச் சமரின்போது 23 போராளிகள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர்.

அவர்களின் விபரம் வருமாறு

பள்ளமடு நோக்கிய நகர்வு முறியடிப்பின்போது

மேஜர் கஜேந்தி (அருந்ததி)
(பத்மநாதன் அகிலா – மாவிட்டபுரம், யாழ்ப்பாணம்)

கப்டன் நந்தா 
(சின்னையா விஜி – திருகோணமலை)

கப்டன் மனோ 
(தங்கசாமி செல்வநாயகி – ஆனந்தபுரம், கிளிநொச்சி)

லெப்டினன்ட் வஞ்சிமயில் 
(சங்கர் இந்திராணி – நெடுங்கேணி, முல்லைத்தீவு)

லெப்டினன்ட் சாந்தினி (இசை) 
(சின்னராசா சுகந்தி – கட்டுவன், யாழ்ப்பாணம்)

லெப்டினன்ட் சுடர்புகழன் 
(பொன்னம்பலம் தவலோகநாதன் – வள்ளிபுனம், முல்லைத்தீவு)

லெப்டினன்ட் சேதுவாணன் (சேதுராமன்) 
(கந்தசாமி யோகநாதன் – பொத்துவில், அம்பாறை)

வீரவேங்கை மலையரசி 
(சின்னையா சாவித்திரி – உடையார்கட்டு, முல்லைத்தீவு)

வீரவேங்கை இயலிசை 
(நமசிவாயம் தர்சினி – பூநகரி, கிளிநொச்சி)

சிராட்டிக்குளம் நோக்கிய முன்னகர்வு முறியடிப்பின்போது

மேஜர் வேணுதரன் 
(சிவஞானம் புவனேந்திரன் – களுவங்கேணி, மட்டக்களப்பு)

கப்டன் செந்தா 
(செல்லத்துரை தயந்தினிதேவி – புங்குடுதீவு, யாழ்ப்பாணம்)

லெப்டினன்ட் சேந்தனன் 
(சாமித்தம்பி புவனேந்திரன் – மண்டூர், மட்டக்களப்பு)

லெப்டினன்ட் குமரழகன் 
(வேலாச்சி தேவதாசன் – திக்கோடை, மட்டக்களப்பு)

லெப்டினன்ட் நெடுங்குமரன்
(இரத்தினம் பத்மரஞ்சன் – சுண்ணாகம், யாழ்ப்பாணம்)

லெப்டினன்ட் சோழன் 
(ஆச்சிப்பிள்ளை உதயகுமார் – முள்ளியவளை, முல்லைத்தீவு)

லெப்டினன்ட் சாந்தனா 
(விககினேஸ்வரன் வேணுகா – உடுப்பிட்டி, யாழ்ப்பாணம்)

லெப்டினன்ட் தேன்னிலா (செந்நிலா) 
(வையாபுரி மனோன்மணி – சேந்தான்குளம், யாழ்ப்பாணம்)

லெப்டினன்ட் முல்லைநிலா 
(பாலசிங்கம் கிருஸ்ணகுமாரி – உடையார்கட்டு, முல்லைத்தீவு)

2ம் லெப்டினன்ட் பிறேமகஜன் 
(சித்திரவேல் தியாகராஜா – வாகரை, மட்டக்களப்பு)

2ம் லெப்டினன்ட் விஜயசூரியன் 
(பொன்னையா சிவக்கொழுந்து – கொம்மந்துறை, மட்டக்களப்பு)

2ம் லெப்டினன்ட் பொன்கீதன் 
(புலேந்திரன் காந்தன் – திக்கோடை,  மட்டக்களப்பு)

பெரியமடு நோக்கிய முன்னர்வு முறியடிப்பின்போது

லெப்டினன்ட் கரிமனு 
(இராசமாணிக்கம் செல்வநாயகம் – துறைநீலாவணை, அம்பாறை)

2ம் லெப்டினன்ட் அஜிந்தன் 
(சண்முகம் ரவீந்திரன் – கழுவங்கேணி, மட்டக்களப்பு)

இம் மாவீரர்களினதும் இதே நாள் மன்னார் சன்னருப்பங்குளம் பகுதியில் சிறிலங்கா படையினர் நடாத்திய எறிகணைத் தாக்குதலின்போது வீரச்சாவைத் தழுவிய

வீரவேங்கை கானகக்கீரன் 
(தேவராசா மதிகரன் – அச்சுவேலி, யாழ்ப்பாணம்)

வீரவேங்கை ஈழமின்னல்
(சந்தனம் ஈஸ்வரநாதன் – குருநகர், யாழ்ப்பாணம்)

திருகோணமலை மாவட்டம் இலுப்பைச்சோலை பகுதியில் அமைந்திருந்த சிறிலங்கா காவல்துறை நிலையம் மீதான தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட

கப்டன் இளங்கதிர் 
(முத்துலிங்கம் முகுந்தன் – குச்சவெளி, திருகோணமலை)

வவுனியா நகரப் பகுதியில் சிறிலங்கா படையினருடன் இடம்பெற்ற மோதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட

வீரவேங்கை புனிதன் 
(இமானுவேல் டெனிசியன் – செல்வபுரம், முல்லைத்தீவு)

யாழ். நல்லூர் பகுதியில் சிறிலங்கா படையினர் கைது செய்ய முற்பட்டவேளை சயனைட் உட்கொண்டு வீரச்சாவைத் தழுவிக் கொண்ட

மேல்நிலை புலனாய்வுப் பொறுப்பாளர்.
லெப்.கேணல் செந்தமிழ்ச்செல்வன் 
(சிவபாக்கியநாதன் பிரபாகரன் – வடலியடைப்பு, யாழ்ப்பாணம்)


லெப்.கேணல் சிவகாமி உட்பட்ட 9 மாவீரர்களின் வீரவணக்க நாள்.

மட்டக்களப்பு மாவட்டம் அரண்கண்வில் பகுதியில் காவியமான லெப்.கேணல் சிவகாமி உட்பட்ட ஆறு மாவீரர்களினதும் மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் வீரச்சாவைத் தழுவிய மூன்று மாவீரர்களினதும் வீர வணக்க  நினைவு நாள் இன்றாகும்.

12.09.2001 அன்று மட்டக்களப்பு மாவட்டம் அரண்கண்வில் பகுதியில் சிறிலங்கா படையினர் பதுங்கியிருந்து நடாத்திய தாக்குதலின்போது

லெப்.கேணல் சிவகாமி 
(சின்னத்துரை நிசாந்தினி – கதிரவெளி, மட்டக்களப்பு)

கப்டன் கலைவிழி 
சங்கரப்பிள்ளை பவளக்கொடி – குரும்பன்வெளி, மட்டக்களப்பு)

லெப்டினன்ட் அருமைநாயகி 
(கந்தப்போடி தனலட்சுமி – வெல்லாவெளி, மட்டக்களப்பு)

2ம் லெப்டினன்ட் தீசனா 
(கிருஸ்ணபிள்ளை கலைவாணி – மண்டூர், மட்டக்களப்பு)

2ம் லெப்டினன்ட் அகநிலா 
(காசுபதி ஜெயா – பனிச்சங்கேணி, மட்டக்களப்பு)

வீரவேங்கை சந்திரமதி 
(செல்லத்தம்பி வனிதா – சுங்கங்கேணி, மட்டக்களப்பு)

ஆகிய போராளிகள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர்.

இம்மாவீரர்களினதும் இதேநாள் மன்னார் மாவட்டம் அடம்பன் பகுதியில் சிறிலங்கா படையினருடனான மோதலில் வீரச்சாவைத் தழுவிய

எல்லைப்படை வீரர் வீரவேங்கை பஞ்சராசா
(ஆறுமுகம் பஞ்சராசா – காரைநகர், யாழ்ப்பாணம்)

மணலாற்றில் சிறிலங்கா படையினர் பதுங்கியிருந்து நடாத்திய தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிய

கப்டன் நிசாந்தினி 
(மாணிக்கம் தவமலர் – தொல்புரம் யாழ்ப்பாணம்)

முல்லை மாவட்டம் வெடிவைத்தகல் பகுதியில் சிறிலங்கா படையினருடனான மோதலில் வீரச்சாவைத் தழுவிய

கப்டன் முகில்வண்ணன் 
(வைரமுத்து சுதாகரன் – களுதாவளை, மட்டக்களப்பு)

ஆகிய மாவீரர்களினதும் 11ம் ஆண்டு நினைவு வணக்க நாள் இன்றாகும்.


தமிழீழ தாயக விடுதலைக்காய் தமது இன்னுயிரை ஈகம் செய்த இந்த வீரமறவர்களிற்கு எங்கள் வீரவணக்கங்கள். இதே நாளில் வீரச்சாவைத் தழுவிய ஏனைய மாவீரர்களிற்கும் எங்கள் வீரவணக்கங்கள்.

தமிழீழம் கிடைக்கும் வரை உங்களை நிச்சயம் தொடர்வோம்.

Image Hosted by ImageShack.us

பேஸ் புக்கில் உங்கள் விருப்பத்தை தெரிவித்து எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள் உறவுகளே.

இத்தளத்தின் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற தங்கள் மின்னஞ்சல் முகவரி கீழே பதிவு செய்யவும்

Image Hosted by ImageShack.us