ஈழம்

ஈழம்

புதன், 3 ஏப்ரல், 2013

பதினெட்டு வயதில் ஒரு அரசாங்க படையையே எதிர்த்து போரிட்ட தமிழன்.

அந்த இளைஞன் ஒரு அரசாங்கத்தை எதிர்த்துப் போராடலாம் என்று முடிவெடுத்த போது அந்த இளைஞனின் வயது வெறும் பதினெட்டு தான். தான் எதிர்க்கப்போவது ஒரு தனி மனிதனையோ அல்லது சிறிய குழுக்களையோ அல்ல, தான் எதிர்க்கபோவது ஒரு நாட்டின் இராணுவத்தை என்று நன்றாக உணர்ந்திருந்த அந்த இளைஞன் அதற்காக வைத்திருந்த ஒரே ஒரு ஆயுதம் ஒரு பழைய துருப்பிடித்த கைத்துப்பாக்கி மட்டுமே.

ஒரு பழைய துருப்பிடித்த கைத்துப்பாக்கியை மட்டுமே ஆரம்பத்தில் வைத்துக் கொண்டு, ஒரு நாட்டின் இராணுவத்தை எதிர்க்க துணியும் தைரியம் அந்த இளைஞனை தவிர வேறு யாருக்கும் வந்து இருக்காது.

அன்று அந்தப் பழைய துப்பாக்கியை மட்டுமே வைத்துக் கொண்டு, இரண்டு மூன்று நண்பர்களுடன் மட்டுமே தனது போராட்டத்தை ஆரம்பித்த அந்த இளைஞன், அன்றிலிருந்து சரியாக முப்பது வருடங்களின் பிறகு, தரைப்படை, கடற்படை, வான்படை என முப்படைகளையும் கொண்டு, முப்படைகளையும் கொண்ட ஒரு மரபு ரீதியான இராணுவமாக தனது படை பலத்தை யாருமே கற்பனை செய்து கூட பார்த்திராத அளவுக்கு மாற்றி காட்டினான்.

அன்று இலங்கை என்ற ஒன்றே ஒரு நாட்டிற்கு எதிராக போராட்டத்தை ஆரம்பித்த அந்த இளைஞன், அதன் பிறகு வந்த முப்பது வருடங்களில், நேரடியாக பதினாறுக்கும் மேலான நாடுகளையும், மறைமுகமாக முப்பதுக்கும் மேற்பட்ட நாடுகளையும் தனித்து எதிர்கொண்டு, யாருக்கும் தலை வணங்காது, யாருக்கும் அடிபணியாது வீரத்துடன் போராடி, வரலாற்றின் பக்கத்தில் தனது பெயரை ஆழமாக பதிவு செய்து கொண்டான்.

நாம் கதைகளில் மட்டுமே படித்த மாவீரர்களின் வீரத்தினை நமது கண் முன்னால், நிகழ்த்தி காட்டி இன்னும் ஆயிரம் வருடங்கள் கடந்தாலும் அழிக்க முடியாத வரலாறாக மாறி விட்ட அந்த வீரன் வேறு யாரும் இல்லை. தமிழர்களின் தலைவன். தமிழீழத்தின் புதல்வன், மேதகு வே. பிரபாகரன் அவர்கள்.




-ஈழமைந்தன்-

பேஸ் புக்கில் உங்கள் விருப்பத்தை தெரிவித்து எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள் உறவுகளே.

இத்தளத்தின் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற தங்கள் மின்னஞ்சல் முகவரி கீழே பதிவு செய்யவும்

Image Hosted by ImageShack.us