ஈழம்

ஈழம்

திங்கள், 13 ஜனவரி, 2014

இனிய தமிழர் திருநாள் வாழ்த்துகள்.

எமது வாசகர்கள் அனைவருக்கும் இனிய தமிழர் திருநாள் வாழ்த்துக்களை தெரிவிக்கின்றோம். தொடர்ச்சியான இனஅழிப்பு மற்றும் இயற்கை அனர்த்தத்தின் மத்தியில் வரும் இத்திருநாளை நாம் ஏற்று, இனிவரும் காலத்தை நாம் எமதாக்க ஒன்றுபட்டு உழைப்போம் என மாவீரர்களின் கல்லறைகளின் மீது நாம் உறுதியெடுப்போம்.


"வீழ மாட்டோம் எனும் நம்பிக்கை மட்டுமல்ல, ஆழமான அடித்தளமும் வேண்டும். விடுதலைக்கு இப்போது பெறும் பலத்தில்தான் எதிர்காலமே இருக்கின்றது.


உலகம் ஓடிவரும் உனக்கு ஒத்தாசை செய்யும் என நம்பாதே. அவர்கள் பலத்தோடு இருந்தால் மதிப்பார்கள். நிலத்தோடு கிடந்தால் மிதிப்பார்கள்.

இதுதான் உலகத்தின் புதிய ஒழுங்காற்றுகை. ஒன்றை மட்டும் நெஞ்கில் எழுதி வைப்போம்.

வென்றால் நாங்கள் அரியணையில் இருப்போம். தோற்றால் தொல்பொருள் அகத்தில் கிடப்போம்"- புதுவை இரத்தினதுரை

தன்மானமுள்ள தமிழனாக இருந்தால் இதை பகிரவும் !

“அண்டிப் பிழைக்க வந்த ஆரியர் கூட்டம் காட்டியதே
அறிவுக்கு ஒவ்வாத அறுபது ஆண்டுகள்

தரணி ஆண்ட தமிழருக்கு தை(சுறவம்) முதல் நாளே தமிழ்ப்புத்தாண்டு”

பாவேந்தர் பாரதிதாசன்:“தையே முதற்றிங்கள்;
தை முதல் ஆண்டு முதல் பத்தன்று நூறன்று;
பன்னூறன்று பல்லாயிரத்தாண்டாய் தமிழர் வாழ்வில் புத்தாண்டு தைம்முதல்நாள் பொங்கல் நன்னாள்”

“நித்திரையில் இருக்கும் தமிழா
சித்திரை அல்ல உனக்குத் தமிழ்ப் புத்தாண்டு
அண்டிப் பிழைக்க வந்த ஆரியர் கூட்டம் காட்டியதே”

“அறிவுக்கு ஒவ்வாத அறுபது ஆண்டுகள்
தரணி ஆண்ட தமிழருக்கு
தை முதல் நாளே தமிழ்ப்புத்தாண்டு”

தமிழ்ப் புத்தாண்டு சித்திரை அல்ல தை முதல் நாளே!

பேஸ் புக்கில் உங்கள் விருப்பத்தை தெரிவித்து எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள் உறவுகளே.

இத்தளத்தின் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற தங்கள் மின்னஞ்சல் முகவரி கீழே பதிவு செய்யவும்