ஈழம்

ஈழம்

திங்கள், 7 மார்ச், 2011

தமிழீழ தேசியப் பறவை செண்பகம் பற்றிய குறிப்பு.

பறவைகளைப் பொறுத்தவரை அதிக பறப்புத்திறன் கொண்ட பறவைகளுக்கு பெரும்பாலும் ஒரு மண்ணுக்குரிய தனித்துவ பூர்வீர்கத் தன்மை கிடையாது. சில பறவைகள் நீண்டகாலத்துக்கு ஒரு தடவை புலம்பெயரும்.
பறப்புத்திறன் குறைந்த பறவைகள் இந்த புலப் பெயர்ச்சிக்குப்படுவதில்லை. இதனால் பறப்புத்திறன் குறைந்த பறவைகளே ஒரு மண்ணுக்குரிய மரபுரிமைச் சொத்துக்களாகின்றன. உலகின் அதிகமான நாடுகளின் தேசியப் பறவைகளாக பறப்புத் திறன் குறைந்த பறவைகளே இருக்கின்றன.

நமது தாயகத்தில் காடை, கௌதாரி, செண்பகம், புளினி, காட்டுக்கோழி, மயில் என்பன உலகின் பலபகுதிகளிலும் உள்ளன. இனக்கூற்று அடிப்படையில் இவற்றில் நமது தாயகத்திற்குரிய தனித்துவ அம்சங்கள் குறைவாகவே உள்ளன. 

இந்த வகையில் தமிழர் தாயகத்தில் பறப்புத்திறன் குறைந்த மரபுரிமைச் சொத்துதாக உள்ள பறவைகளில் தனித்துவ அம்சங்கள் நிறைந்த செண்பகம் தேசியப் பறவையாகப் பிரகடனப்படுத்தப்படுள்ளது.

செண்பகம் பொதுவாக ஆங்கிலத்தில் கிறேற்றர் கூகல் அல்லது குறோ பீசன்ற் என அழைக்கப்படுகின்றன. நமது தாயகத்திலும், இந்தியா, சீனா, ஆகிய நாடுகளிலும் இதன் இனங்கள் வாழ்கின்றன.

கறுப்பு உடலையும் காவிநிற செட்டைகளையும் கொண்ட செண்பகம் காகத்தை விட சற்றுப் பெரியது. நமது சூழலில் இவை தத்தித் தத்தி திரிவதை நாம் காணலாம். இது உலர்வலயப் பகுதிகளில் தான் அதிகம் உள்ளது.


மெதுவாக நடையும், தத்தித் தத்தித் பாய்தலும் இதன் தினத்துவ செயற்பாடுகள். பற்றைகள், சிறுமரங்களின், கீழ்ப்பகுதிகள் இதன் வாழிடங்கள். நத்தைகள், பூச்சிகள், அட்டைகள், தவளைகள், பாம்புகள், ஓணான்கள் செம்பகத்தின் உணவுகள் ஆகும்.

பிற பறவைகளின் கூடுகளில் இடப்பட்ட முட்டைகளையும் செண்பகம் உண்ணும். செம்பகத்தின் வேட்கைக்காலம் பெப்ரவரியில் இருந்து செப்டம்பர் வரையாகும். இது தொடர்ந்து 3 முதல் 4 வரையான முட்டைகளை இட்டு அடைகாக்கும். இதன் உயிரியல் பெயர் சென்ரோபஸ் சினென்சிஸ் (Centropus sinensis)

- தி.தவபாலன் -


Image Hosted by ImageShack.us

இத்தளத்தின் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற தங்கள் மின்னஞ்சல் முகவரி கீழே பதிவு செய்யவும்

Image Hosted by ImageShack.us