ஈழம்

ஈழம்

புதன், 16 மார்ச், 2011

வீரப்பன் காடும்!! விடுதலை புலிகளும்!!

இந்தியாவில் விடுதலைப் புலிகள் இருக்கின்றார்கள் என்பதை புலனாய்வுத் தகவல்கள் உறுதிப்படுத்துவதாக ஹிந்து பத்திரிகை அடித்துச் சொல்கின்றது.தற்போதைய நிலையில் தமிழ்நாடு மாநிலத்தில் விடுதலைப் புலிகளின் நடமாட்டம் குறைந்திருப்பது உண்மைதான்.
என்று ஏற்றுக் கொள்ளும் ஹிந்து பத்திரிகை, ஆயினும் அயல் மாநிலங்களை நோக்கி அவர்கள் நகர்ந்து வருவதாக ஹிந்து பத்திரிகை தெரிவிக்கின்றது. 

அவ்வாறான நிலையில் தமிழ் நாட்டில் தமது செயற்பாடுகளைக் குறைத்துக் கொண்டுள்ள விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் தற்போது கேரளாவின் வனப்பகுதிகளை நோக்கி நகர்ந்து வருவதாக இந்தியப் புலனாய்வுத்துறைக்கு தகவல்கள் கிடைத்துள்ளது. அதனையொட்டி தமிழ்நாடு மற்றும் கேரளாவில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் ஹிந்து பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

சிந்திக்கவும்: இந்த தகவல் உண்மையானால் இது மகிழ்ச்சி அளிப்பதே!! அது போல் விடுதலை போராட்ட வீரர்கள் செயல்படுவதற்கு தகுந்த களம் வீரப்பன் வாழ்ந்த காடே ஆகும். தனி ஒரு வீரப்பனை பிடிக்க முடியாமல் சூழ்ச்சி செய்து வீரப்பனை கொன்றார்கள். அந்த காட்டு பகுதி இன்றைய தமிழீழ போராட்டத்தை முன்னெடுக்க உதவியாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. 

அது மட்டுமல்லாமல் வீரப்பன் ஒரு தனி ஆளாக கொள்கை இல்லாமல் இருக்கும் பொது அவனை ஒன்றும் செய்யவில்லை. என்று வீரப்பனிடம் தமிழ் ஆதரவு சிந்தனை வந்ததோ!! தமிழர் விடுதலை இயக்கம் மற்றும் தமிழ் சிந்தனைவாத தலைவர்களோடு தொடர்பு கொண்டானோ அன்றே இந்திய அரசாங்கம் வீரப்பனை கொல்ல சூழ்சிகள் செய்ய ஆரம்பித்தது. 

மீண்டும் தமிழ் நாட்டில் தமிழர் விடுதலை படை அமைப்பு கட்டி எழுப்பப்படும். அந்த விடுதலை அமைப்பின் வீரர்கள் ஈழ தமிழர் ஆயுத போராட்டத்திற்கு உறுதுணையாக இருப்பார்கள். அத்தோடு தனி தமிழ்நாடு என்ற இலட்சியத்தை அடையவும் பாடுபடுவார்கள். 

நன்றி : தமிழ்ச்செல்வன். (செய்தி மின்னஞ்சல் வழியாக)இத்தளத்தின் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற தங்கள் மின்னஞ்சல் முகவரி கீழே பதிவு செய்யவும்