ஈழம்

ஈழம்

புதன், 16 மார்ச், 2011

எங்கள் தலைவன் செய்து விட்டு சொல்கிற சரித்திர நாயகன்.



தமிழ் தேசிய பெருந்தலைவர் எம் மக்களை நிராதரவாக விட்டு விட்டார் என்று கருத்து கூறியிருக்கும் ஊடகவியலார் அனிதாபிரதாப் அவர்களுக்கு…. சிபிச்சந்தர் திரைப்பட இயக்குனர்.



தமிழ் தேசிய பெருந்தலைவர் எம் மக்களை நிராதரவாக விட்டுவிட்டார் என்று கருத்து கூறியிருக்கும் ஊடகவியலார் அனிதாபிரதாப் அவர்களுக்கு ….

உலகம் கண்டிராத ஒரு மாவீரன் என்று எம் தலைவனை புகழ்பாடி வியந்து நின்ற நீங்களா இப்படி ஒரு கருத்தை முன் வைத்து இருக்குறீர்கள். வெற்றி பெற்ற தெருச் சண்டைகளை புரட்சி என்றும் பின் வாங்குகிற புரட்சிகளை தெருச்சண்டை என்று கருத்துகொள்ளும் ஹிந்து பத்திரிகை போல் நீங்கள் ஆனது ஏன்?

மண்ணுக்காக மண்ணிலேயே விதை விதைத்து  தலைவனால் வளர்த்தெடுக்கப்பட்ட புலித்தம்பிகள் லட்சியமாக கொண்டிருந்தனர். முகத்தின் முன் மரணத்தை தொங்க விட்டுகொண்டு தேசிய விடுதலைக்கு களமாடிய வீரர்களை நீங்கள் எங்கள் மண்ணில் தவிர வரலாறுகளிலோ வேறு எங்காவது கண்டதுண்டா?

அமெரிக்க அரசு பல்லாயிரம் கோடிகளை கொட்டிகொடுத்து திருகோணமலையில் தளம் கேட்ட போதும் தவிர்த்த எங்கள் தலைவனா எங்களை நிராதரவாக விட்டுசெல்வார். தான் மட்டும் தப்பித்தால் போதும் என்கிற மனநிலை எம் தலைவனுக்கு இருந்திருந்தால் இந்திய அமைதிப்படை சென்ற போதே புலம் பெயர்ந்து சென்றிருப்பார்.. அல்லது இந்திய அரசு பேச்சுவார்த்தைக்கு அழைத்தபோதே ஈழம் செல்லாமல் தாய்தமிழ் நாட்டிலே தங்கியிருப்பார் …

எந்த சமரசத்திற்கும் இடம் தராமல் ஈழ விடுதலை ஒன்றே தன் வாழ்கையின் உன்னத கனவாய் களத்தில் நின்று களமாடிய ஒரே தலைவன் எங்கள் தலைவன்….

எங்கள் தேசிய தாய் கிடத்தி வைக்கப்பட்ட அந்த தருணத்தில் எங்கள் ஈழ தாய் ஒருத்தி வருவான் பிராபாகரன் வருவான் என்று தீர்க்கமாக சொன்ன காணொளியை பாருங்கள் .நிராதரவாய் எங்கள் தலைவன் விட்டு சென்றுவிட்டான் என்று அந்த தாய் நினைத்திருந்தால் எப்படி நம்பிக்கையான வார்த்தைகளை அந்த தாயால் சொல்லியிருக்க முடியும். அது ஒரு தாயின் வார்த்தைகள் அல்ல பண்ணிரண்டுகோடி தமிழர்களின் உள வெளிப்பாடு எதையும் சொல்லிவிட்டு செய்து விளம்பரம் தேடும் அரசியல் வாதி அல்ல எங்கள் தலைவன் .செய்துவிட்டு சொல்கிற சரித்திர நாயகன் எங்கள் தலைவன்.

தலைவனுடைய மௌனம் நிரந்தரம் என்று நினைக்கிற இந்திய அரசியல் வாதிகளை போல் நீங்கள் சிந்திக்க வேண்டாம் …அதிர்ந்து விட்டு மௌனமாகிற பூமி பின் எப்படி சுனாமியாக வெளிப்படுகிறதோ அதேபோல ஒரு நீண்ட போராட்டத்திற்கு பின் மௌனமாய் உள்ள எம் தலைவன் வெளிப்படுவான் முன்னிலும் உக்கிரமாக… உலக வல்லாதிக்க அரசுகளால் பின் வாங்கி இருக்கிற எம் தலைவனின் படையணி மறுபடியும் புறப்படும் .தலைவனின் தலைமையில் போராடும் ஈழத்தை வெல்லும்…


எங்களை அவர் நிராதரவாக விட்டு செல்லவில்லை ஈழ நெருப்பு நீர்த்துபோகாமல் பார்த்துகொள்ளும் உன்னத பணியை கொடுத்துவிட்டு சென்றுள்ளார்.
முன்னிலும் வேகமாக வருவார் எங்களை வழி நடுத்துவார்…அதுவரை இயற்கையின் மரணம் கூட எம் தலைவனை தொடத் தயங்கும் ,,,எங்களுக்கு ஐயம் இல்லை
உலக பெரும் வீரன் என்று வியந்த உங்களை கூட எம் தலைவனின் போராட்டத்திற்கு முரண் பட்ட சக்திகள் சதியால் வீழ்த்தியிருப்பதை எண்ணி அழுவதா …சினம்கொள்வதா …சீறி எழுவதா

-சிபிச்சந்தர்
திரைப்பட இயக்குனர்.



Image Hosted by ImageShack.us

இத்தளத்தின் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற தங்கள் மின்னஞ்சல் முகவரி கீழே பதிவு செய்யவும்

Image Hosted by ImageShack.us