ஈழம்

ஈழம்

வெள்ளி, 4 மார்ச், 2011

நாம் தமிழர் இயக்க பேரொளி சுபா. முத்துக்குமார் வாழ்க்கைச் சரித்திரம்.

தமிழ் தேசியப் போராளி சுபா.முத்துகுமார் வாழ்க்கை குறிப்பு.

தாயார் பார்வதி, தந்தை சுந்தரம் இவர்களின் இரண்டாவது பிள்ளையாக மதுரையில் பிறந்தார். தந்தையின் கட்டிடத்தொழில் காரணமாக சிறு வயதிலேயே பழனிக்கு சென்றதால் பழனியிலேயே வளந்தார்.
பள்ளிப்படிப்பு காலம் முதலே ஈழ விடுதலைக்காக பழனியில் நடந்த பல்வேறு போராட்டங்களில் பங்கேற்றார். ஈழ விடுதலை தமிழினத்திற்கு எவ்வளவு அவசியமோ. அதே போன்று தமிழ் நாடு விடுதலையும் தேவை என்ற புரிதலுக்கு வந்தார். அதன் தொடர்ச்சியாக தமிழ் தேசிய மீட்சிப்படையில் தன்னை இணைத்துக்கொண்டு ஆயுத வழியில் தமிழ்நாடு விடுதலை பெற முடியும் என்ற முடிவுக்கு வந்தார். இந்த முடிவுக்கு வருவதற்கு ஆயுத வழியில் போராடி உயிர்நீத்த தமிழ்நாடு விடுதலைப்படையின் தோழர். தமிழரசனையே முன்னோடியாகக் கொண்டார்.ஆயுதப் பயிற்சிக்காக தமிழிழத்திற்கு சென்றார். அங்கு தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களின் வழிகாட்டுதலின் படி சிங்களப் படைக்கு எதிராக விடுதலைப் புலிகளின் பல்வேறு வெற்றிகரமான தாக்குதல்களில் பங்கேற்றார். தேசியத் தலைவர் பிரபாகரனின் தனி பாதுகாப்பு அணிக்கு (சைபர் விங்) தேர்வு செய்யப்பட்டார் ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு தமிழகம் திரும்பினார்.

தமிழ்நாடு விடுதலைக்காக தமிழ்த்தேசிய மீட்சிப்படையை தலைமையேற்று வழி நடத்தினார். அத்துடன் தமிழிழ விடுதலைக்காக விடுதைலைப்புலிகளுக்கு    தேவையான பொருட்களை அனுப்பி வைத்தார். சென்னை சிறையிலிருந்து தப்பித்த போராளி ரோமியோ மற்றும் அவரது தோழர்களையும் பாதுகாப்பாக ஈழத்திற்கு அனுப்பி வைத்தார். அது போலவே உலகே வியக்கும் வண்ணம் வேலூர்  கோட்டையிலிருந்து நீண்ட நெடிய சுரங்கம் அமைத்து தப்பித்து வந்த 4  பெண் போராளிகள் உட்பட 43 விடுதலை புலிகளையும் பொறுப்பேற்று ஈழத்திற்கு அனுப்பி வைத்தார். மணமேல்குடியில் விடுதைலைப்புலிகளுக்கு பொருட்களுடன் காத்திருந்த போது கைது செய்யப்பட்டு தடா சட்டத்தின் கீழ் சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இரண்டரை ஆண்டுகளுக்கு பிறகு பிணையில் விடுதலையானர்.

விடுதைலை ஆனவுடன் தலைமறைவு ஆனார்.சந்தனக்காட்டில் வீரப்பனாருடன் சேர்ந்து போராட்டத்தளம் அமைத்தார். வெள்ளித்திருப்பூர் காவல் நிலையத்தை வீரப்பனாருடன் தலைமையேற்று தாக்குதல் நடத்தி ஆயுதங்களை எடுத்துச் சென்றார்.  இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு கோவை சிறையில் சிறைப்படுத்தப்பட்டார். கன்னட நடிகர் ராஜ்குமாரை வீரப்பனார் பிடித்துக்கொண்டு விடுவிக்க தமிழர்களின் சீவாதாரப் பிரச்சினையான காவிரி நீர், பெங்களூரில் திருவள்ளுவர் சிலை திறப்பு, அதிரடிப்படையால் பாதிக்கப்பட்ட மலைவாழ் தமிழ்மக்களுக்கு தீர்வு போன்ற கோரிக்கைகளில் முத்துக்குமாரை விடுதலை செய்யவேண்டும் என்ற கோரிக்கையையும் முன் வைத்தார்.

பிறகு சிறையிலிருந்து பிணையில் விடுவிக்கப்பட்டார்.  அய்யா பழ.நெடுமாறனுடன் அரசியலில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு வீரப்பனாருக்கு பொருட்களை கொண்டு சென்றதாக கொளத்தூர்.தா.செ.மணி அவர்களுடன் கூட்டு அதிரடிப்படையால் கைது செய்யப்பட்டு கடும் சித்திரவதைக்கு ஆளாகி கன்னட சிறையில் அடைக்கப்பட்டார். அத்துடன் கர்நாடகத்தில் 1992-ல் நடந்த காவிரிக் கலவரத்தில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்காக வெடிகுண்டு தாயரித்ததாக கைது செய்யப்பட்ட கன்னடத் தமிழர்களுடன் சிறைப்படுத்தப்பட்டார். நான்கரை ஆண்டுகளுக்கு பிறகு பிணையில் விடுதலை பெற்றார்.

மீண்டும் தமிழ்தேசிய அரசியலில் களம் புகுந்தார். மதுரையில் முள்வேலி தகர்த்தெறிவோம் மாநாட்டை சீமானுடன் மற்றும் தோழர்களுடன் வெற்றிகரமாக நடத்தினார். நாம் தமிழர் கட்டியியை தொடங்குவதற்க்கான பணியில் ஈடுபட்டார். அதே வேளையில் வடகாடு கரு.காளிமுத்து-சிவந்தியம்மாள் ஆகியோரின் மகளாகிய-மாதரசியை சாதி மறுப்பு மணம் முடித்தார். பிறகு ஈழத்திற்கு இரத்தப் பைகளையும் மருந்துப்பொருட்களையும் அனுப்பிவைத்ததாக கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார். ஒன்றரை மாதம் கழித்து பிணையில் விடுதலை பெற்றார். சீமான் மற்றும் தோழர்களுடன் நாம் தமிழர் இயக்கத்தை தொடங்கி தமிழகம் முழுவதும் மாநில ஒருங்கிணைப்பாளராக சுற்றி சுழன்று பணியாற்றினார்.



சற்றேக்குறைய -  10 ஆண்டுகள் தமிழக விடுதலைக்காக சிறை வாழ்வு.
                                       5  ஆண்டுகள் தலைமறைவு, ஆயுதப்போரட்ட வாழ்வு.
                                       4  ஆண்டுகள் மக்களுக்காக அரசியல் வாழ்வு. 



நன்றி நாம் தமிழர் இயக்கம்.

Image Hosted by ImageShack.us




இத்தளத்தின் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற தங்கள் மின்னஞ்சல் முகவரி கீழே பதிவு செய்யவும்

Image Hosted by ImageShack.us