ஈழம்

ஈழம்

வெள்ளி, 4 மார்ச், 2011

திருப்பூர் மாவட்டத்தில் தேசத்தின் அன்னை பார்வதி அம்மாவுக்கும் முத்துக்குமாருக்கும் நாம் தமிழர் கட்சியினர் நடத்திய வீரவணக்க கூட்டம்.(சீமானின் எழுச்சி உரை காணொளி மற்றும் படங்கள் இணைப்பு.)

உலக தாய்மொழி நாளான 21.02.11 அன்று திருப்பூர் மாவட்டம் “பல்லடம்” நகரில் நாம் தமிழர் கட்சியின் கொள்கை விளக்க பொதுக் கூட்டம் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொள்ள மிகுந்த எழுச்சியுடன் நடை பெற்றது.
இம் மாபெரும் பொதுக்கூட்டத்தில் தமிழ் இனத்தின் வீரத்தாய்,தேசிய தலைவரின் தாயார் பார்வதி அம்மாவின் திரு உருவ படமும்,தமிழின எதிரிகளால் படுகொலை செய்யப்பட்ட நாம் தமிழர் கட்சியின் மாநில அமைப்பாளர் புதுக்கோட்டை முத்துக்குமார் அவர்களின் படமும் செந்தமிழன் சீமான் அவர்களால் திறக்கப்பட்டு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.பல்லாயிரக்கணக்கான மக்கள் வெள்ளத்தில் செந்தமிழன் சீமான் அவர்கள்”நாம் தமிழர் கட்சி ஏன்?எதற்க்கு?” என்கிற தலைப்பிலும்,தாய் மொழிக்கல்வியின் அவசியம் குறித்தும் எழுச்சியுரையாற்றினார்.

இக்கூட்டத்தில் திருப்பூர் நகர அமைப்பாளர் சு.ப.சிவக்குமார்,வழக்கறிஞர் ராசீவ்காந்தி,பேராசிரியர் கல்யாணசுந்தரம் ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள்.












Image Hosted by ImageShack.us

இத்தளத்தின் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற தங்கள் மின்னஞ்சல் முகவரி கீழே பதிவு செய்யவும்

Image Hosted by ImageShack.us