ஈழம்

ஈழம்

திங்கள், 21 மார்ச், 2011

ஒரு விடுதலைப் போராளியின் கனவு நனவாகிறது.தமிழீழத்தில் ஒளிப்பதிவு செய்யப்பட்ட திரைப்படம் உயிர்ப்பூக்கள்.


அடே மச்சான் எங்கே நிற்கிறாய் அடே இனியவன் எங்கே நிற்கிறாய்.இங்கே இருக்கிறேன் மச்சான் என்றான் இனியவன்.ஆமாம் அது ஒரு கடல்கரும்புலிகளின் முகாம்.ஏதோ ஒரு கடற்கரையில் அமைக்கப்பட்ட முகாம்.

ஈழ விடுதலைக்காக விடுதலை போராட்டத்தில் இணையும் போராளிகள் அவர்தம் விருப்பத்திற்கமைய துறைகள் வகுத்தமைக்கப்பட்டு கடல் கரும்புலிகள் என்ற துறைக்கு இணைவோர் இந்த முகாமுக்கு கொண்டுவரப்பட்டு பயிற்சி கொடுக்கப்படுகின்றன.அந்த முகாம் ஒரு இராணுவ பயிற்சிக்கூடமாக இருக்காமல் ஒரு இனத்தின் விடுதலைக்காக ஒரு தேசியத்தின் விடுதலைக்காக உயிர் தியாகம் செய்யும் மகத்தானவர்களின் இருப்பிடம் என்று பறைசாற்றுவதற்க்காக என்றமைக்கப்பட்டது போல் தோற்றம் பெற்றிருந்தது.

இனியவனின் இருப்பிடம் கண்ட சுரேந்திரன் அடே மச்சான் ஏன் இங்கே இருக்கிறாய் என்று வினாவினான்.கண்ணீரை துடைத்துக்கொண்டு ஒன்றும் இல்லை மச்சான்.அடே சொல்லு மச்சான் என்ன பிரச்சினை?ஒன்றும் இல்லை அதுசரி ஏன் என்னை தேடுகிறாய் என்றான் இனியவன்.அதுவா உனக்கு வந்த அந்த அதிஸ்டத்தை எனக்காக விட்டுத்தருவாயா?எது மச்சான்?அதுதான் நாளை மறுநாள் டோறா மீது நடக்கப்போகும் கரும்புலித்தாக்குதல் பொறுப்பு உன்னிடம் கொடுக்கப்பட்டிருக்கிறது அதை எனக்கு விட்டுத்தருவாயா அதை நான்தான் செய்யவேண்டும் ஏனெனில் தாக்குதல் நடைபெறும் இடம் நான் பிறந்த இடம் மச்சான் அதுமட்டும் இல்லையடா அந்த டோறா என்ர ஊர்மக்களை எவ்வளவு கொடுமைப்படுத்தியது அதுமட்டுமா என்னுடைய அப்பா தம்பியை கொன்று எங்க குடும்பத்தை சின்னா பின்னமாக்கியது அந்த டோறாதான்.என்னுடைய குடும்பத்தையும் ஊர்மக்களையும் கொடுமைப்படுத்திய அந்த டோறாவை நான்தான் அழிக்கவேண்டும் மச்சான்.


அது சரி மச்சான் உனக்கு விட்டுத்தருகிறேன்.இப்ப உன்னுடைய குடும்பம் எங்கே எப்படி இருக்கிறார்கள்.எங்க குடும்பமா எப்படி இருந்தோம் நானும் ஒரு தங்கை ஒரு தம்பி அப்பாவும் அம்மாவும் ஒரு அழகான வீட்டில் வசித்து வந்தோம்.இப்படித்தான் ஒருநாள் அடே ராமு(இந்த ராமுதான் வீடுதலை போருக்காக பெயர் மாற்றம்செய்யப்பட்ட சுரேந்திரன்) இங்கே வாயேன்.என்னப்பா கூப்பிட்டிங்களா? ஆமாம் ராமு இன்றைக்கு என்னால் கடலுக்கு வர முடியவில்லையடா நீயும் அவன் ராசுவையும் கூட்டிக்கொண்டு கடலுக்கு போய் வருகிறாயா? நாம ஒரு நாளுக்கு கடலுக்கு போகாவிட்டாள் ஒருநாள் கஞ்சிக்கே ஏங்கிற குடும்பம் நம்ம குடும்பம்.சரி அப்பா நானும் தம்பியும் போய் வருகிறோம்.டேய் கவனம் டோறா அடிக்கடி வாறானாம்.நேற்று முதல் நாள் நம்மட ஆக்கள் கடலில் மீன் பிடித்துக்கொண்டிருக்கும் போது அந்த டோறாவில் இருந்த நேவிக்காரங்கள் சுட்டாங்களாம் நம்மட ஆக்களில் இரண்டு பேருக்கு காயமாம் அதுதான் கவனம்.சரி அப்பா நாங்கள் கவனமாக போய்வருகிறோம்.

தம்பி ராசு எங்கே இருக்கிறாய் வா உன்னையும் என்னையும் அப்பா கடலுக்கு போய்வரட்டாம்.அண்ணா என்னை கூப்பிட்டியா.ஆமாம் வா கடலுக்கு போவோம்.சரி அண்ணா.இருவரும் கடலுக்கு செல்வதற்கான ஆயத்தங்களுடன் கட்டுமரத்தை நோக்கி நடை கட்டினார்கள்.அடுத்த சில நேரங்களில் நடக்கப்போகும் சம்பவத்தை தெரிந்தது போல கடலலைகள் அமைதியுடன் இருந்தது.என்ன அண்ணா ஒரு ஆக்களையும் காணவில்லை.அவங்க வருவாங்க நீ பின்னுக்கு தள்ளு நான் முன்னுக்கு இழுக்கிறேன்.சரி அண்ணா.இருவரும் கட்டுமரத்தை கடலுக்குள் தள்ளி மீன்கூட்டங்கள் இருக்கும் இடம் நோக்கி கட்டுமரத்தை நகர்த்தினர்.என்ன அண்ணா இங்கேயும் ஒருத்தரையும் காணவில்லை.அடே விடுடா அவங்கள் வருவாங்கள்.

என்னங்கோ என்னங்கோ கொஞ்சம் எழும்புங்கோ இந்த கோப்பி தண்ணீயை குடியுங்கோ கொஞ்சம் உடம்புக்கு நல்லா இருக்கும் இந்தாங்கோ.போர்த்து மூடிக்கொண்டு படுத்திருந்தவர் மனைவி பார்வதியின் குரல் கேட்டு எழும்பியவர் கோப்பி தண்ணீரை வாங்கி குடிக்கத்தொடங்கினார் சிவபாதம்.இரவுக்கு என்ன சாப்பாடு என்று வினாவினார் சிவபாதம்.என்னங்க நேற்று நீங்கள் கடலுக்கு போகவில்லை இன்று சாதம் வடிக்கவில்லை.நேற்று வடித்த சாதத்தில் கொஞ்சம் இருந்ததனால் பிள்ளைகள் மூன்றுபேரும் சாப்பிட்டார்கள்.அதுதான் பார்வதி மூத்தவனையும் இளையவனையும் கடலுக்கு அனுப்பிட்டேன் என்னால் போகமுடியவில்லை நாம கடலுக்கு போகாமல் இப்படியே இருந்தால் என்ன செய்வது அதுதான் அனுப்பிவிட்டேன்.மகள் எங்கே தூங்கிவிட்டாளா? ஆமாம்.சரி நீயும் போய் படுத்துகொள் விடிய கடலுக்கு போகவேண்டும் என்று மண்ணெண்ணை விளக்கை அனைத்தார்.

அண்ணா அங்கே பாருங்கோ நேவிக்காரன் வாறன் போல இருக்கு வெளிச்சம் தெரியுது.இல்லைடா நீ பயப்படாமல் இரு.இல்லை அண்ணே அவன்தான் வாறன் நீ குதி அண்ணே குதி.நான் உன்னை விட்டு குதிக்கமாட்டேன்.இல்லை அண்ணா அவன் கிட்ட வந்திட்டான் குதி அண்ணா. வெளிச்சம் வர வர பெரிதாக தெரியத்தொடங்கியது.நேவிக்காரன் நெருங்கி வருவதை கண்ட ராமு கடலுக்குள் குதித்தான்.ராசுவோ கட்டுமரத்திற்குள் படுத்திருந்தான்.வந்த நேவிக்காரன் தாறுமாறாக சுடத்தொடங்கினான்.

மகன்கள் கரைக்கு வந்திருப்பார்கள் என்று சிவபாதமும் பார்வதியும் கடலுக்கு சென்று கொண்டிருந்தனர்.செல்லும் வழியில் ஏன் சிவபாதம் நேற்று இரவு கடலுக்கு போகவில்லையா? இல்லை சின்ராசு எனக்கு கொஞ்சம் உடல் நிலை சரியில்லை அதுதான் மகன்களை அனுப்பினனான் இப்ப கரைக்குத்தான் போகிறோம் இரவு வெடிச்சத்தமும் கேட்டது.ஆமாம் சிவபாதம் நேற்று இரவு ஒரே வெடிச்சத்தம்தான் இந்த சாமான்களை வீட்டை கொடுத்துவிட்டு நானும் அங்கே வருவேன் என்று சொல்லி பிரிந்து நடையை கட்டினார் சின்ராசு.வா பார்வதி போவோம்.என்னங்க பயமாக இருக்குது.அது ஒன்றும் இல்லையடி வா சுறுக்காக.
என்னங்கோ அங்கே பாருங்கோ சனங்கள் கூட்டமாக நிற்கினம் அழுகுரலும்கேட்க்குது.ஓடி வா பார்ப்போம்.என்னை விட்டுவிட்டு போட்டியே தம்பி என்று தம்பி ராசுவின் உடலை தன்மடியில் வைத்து அழுதுகொண்டிருந்தான் ராமு.படுபாவிகள் என் தம்பியை சுட்டுப்போட்டாங்கள்.கூட்டத்தை விலக்கி உள்ளே
பார்த்தவர்கள் ராசுவின் உடலை கண்டு கதறினார்கள்.தம்பியின் சடங்குகளை எல்லாம் முடிந்து பல நாட்களாகின நானும் அப்பாவும் கடலுக்கு போய்வந்தோம். 

இப்படித்தான் ஒருநாள் என் தம்பியை சுட்ட மாதிரி என் அப்பாவையும் சுட்டுப்போட்டாங்கள் அந்த நேவிக்காரங்கள் அப்பாவின் உடலை கூடபார்க்காமல் இங்கே அப்படியே வந்திட்டேன் என் அம்மா என் தங்கை இப்ப எங்கே எப்படி இருக்கிறார்கள் என்று தெரியாது மச்சான்.அதுதான் மச்சான் என் அப்பா தம்பியை கொண்டு எங்க குடும்பத்தை சின்னா பின்னமாக்கிய அந்த நேவிக்காரங்களை நான்தான் கொல்லவேண்டும் மச்சான்.சரி மச்சான் நான் அண்ணணுடன் கதைத்து மாத்தி தாறன் என்றான் சுரேந்திரன்.


தாக்குதல் நேரம் குறிக்கப்பட்டு சுரேந்திரனுடன் சில போராளிகளும் சென்றனர் தாக்குதல் இடத்திற்கு.டோறா வருவதை கண்டு சுரேந்திரனை குண்டுகள் நிரப்பிய விரைந்து செல்லும் படகில் சென்று அந்த டோறாவை தாக்கியழிக்க வழியனுப்பினர்.அந்த டோறாவை அழிக்கப்போகிறோம் என் ஊர் மக்களை என் குடும்பத்தை கொடுமைப்படுத்திய அந்த டோறா இன்று அழியப்போகிறுது என்ற சந்தோஷத்துடன் தனது கனவு இன்று நனவாக போகிறது என்ற சந்தோஷத்துடன் புறப்பட்ட சில வினாடிகளில் பெரும் சத்தத்துடன் வெடியோசையுடன் அந்த டோறா தாக்கியழிக்கப்பட்டது.



அடுத்த நாள் பத்திரிகை பார்த்த சுரேந்திரனின் தாய் பார்வதி தன் மகனின் வீரசெயலை கண்டு வியப்புற்று பெருமூச்சுவிட்டாள் அந்த வீரத்தாய்.மக்கள் எல்லோரும் கடல்கரும்புலியான மாவீரன் சுரேந்திரனின் திருவுருவ படத்திற்க்கு மலர்தூவீ அஞ்சலி செலுத்தினர்.



Image Hosted by ImageShack.us

இத்தளத்தின் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற தங்கள் மின்னஞ்சல் முகவரி கீழே பதிவு செய்யவும்

Image Hosted by ImageShack.us