ஈழம்

ஈழம்

வியாழன், 13 அக்டோபர், 2011

14.10.1999 கொக்குளாய் கடலில் வீர காவியமான கரும்புலிகளின் வீரவணக்க நாள் இன்றாகும்.

14.10.1999 முல்லை மாவட்டம் கொக்குளாய்க் கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையினருடன் மோதல் நடைபெற்றுக் கொண்டிருந்தவேளை எதிர்பாராத விதமாக ஏற்பட்ட படகு விபத்தில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் அருந்தவம், லெப்.கேணல்புவனேஸ் உட்பட்ட ஆறு கடற்கரும்புலி மாவீரர்களின்  வீரவணக்க நாள் இன்றாகும்.

கொக்குளாய் கடற்பரப்பில் கடற்படையினரின் டோறா கடற்கலங்கள் கடற்புலிகளால் வழிமறிக்கப்பட்டு தாக்கப்பட்டுக் கொண்டிருந்தவேளை டோறா கலங்களை இலக்கு வைத்து நகர்ந்து கொண்டிருந்த இரு கடற்கரும்புலிப் படகுகள் எதிர்பாராத விதமாக ஒன்றுடன்ஒன்று மோதிக்கொண்டதினால் ஏற்பட்ட விபத்தில் லெப்.கேணல் அருந்தவம், லெப்.கேணல்புவனேஸ், மேஜர் கலைமகள், மேஜர் சூரியப்பிரபா, மேஜர் பரணி, கப்டன் சுதாகரன் ஆகிய கடற்கரும்புலிகள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர்.

தொடர்ந்து நடைபெற்ற மோதலின்போது கடற்படையின் நான்கு டோறா படகுகள் கடற்புலிகளால்சேதமாகக்கப்பட்டன. இதன்போது கடற்புலி மேஜர் துவாகரன் வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்.

தாயக விடுதலைக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மானமாவீரர்களிற்கு எங்கள் வீரவணக்கம்.

லெப்.கேணல் அருந்தவம் 
லெப்.கேணல் புவனேஷ் 
கப்டன் சுதாகரன் 
மேயர் கலைமகள் 
மேயர் பரணி/கோபி 
மேயர் சூரியப்பிரபா
கடற்புலி மேயர் துவாகரன் 


தமிழீழ தாயக விடுதலைக்காக தங்கள் இன்னுயிரை ஈகம் செய்த இந்த மானமாவீரர்களிற்கும் மற்றும் இதே நாளில் வீரச்சாவடைந்த ஏனைய மாவீரர்களுக்கும் எங்கள் வீர வணக்கத்தை தெரிவித்து கொள்கின்றோம்.

தமிழீழம் கிடைக்கும் வரை உங்களை நிச்சயம் தொடர்வோம்.

Image Hosted by ImageShack.us

இத்தளத்தின் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற தங்கள் மின்னஞ்சல் முகவரி கீழே பதிவு செய்யவும்

Image Hosted by ImageShack.us