ஈழம்

ஈழம்

வியாழன், 20 அக்டோபர், 2011

லெப்.கேணல் சந்தோசம் மாஸ்ரர் உட்பட 8 மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.

21.10.1987 அன்று யாழ். கோண்டாவில் பகுதியில் இந்தியப் படையினருடனான மோதலின்போது வீரச்சாவைத் தழுவிக் கொண்ட விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர்களில் ஒருவரும் முன்னாள் திருகோணமலை மாவட்டச் சிறப்புத் தளபதியுமான லெப்.கேணல் சந்தோசம் மாஸ்ரர் அவர்களின் வீர வணக்க  நினைவு நாள் இன்றாகும்.


இந்த வீர மறவனுக்கு எங்கள் வீர வணக்கத்தை தெரிவித்து கொள்கின்றோம்.

1983-ஆம் ஆண்டு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த திருநெல்வேலித் தாக்குதலில் பங்குபற்றிய போராளிகளுள் சந்தோசம் மாஸ்டரும் ஒருவர்.

அந்த வரலாற்றுத் தாக்குதலின் நினைவுகளை மூத்த தளபதி கேணல் கிட்டு அவர்கள் ‘களத்தில்’ என்ற ஏட்டில் எழுதியிருந்தவற்றை மீட்டிப்பார்பது இங்கு பொருத்தமாக இருக்கும்.

1983ம் ஆண்டு யூலை மாதம் 23ம் நாள் இரவு 11. 00 மணியளவில் யாழ் திருநெல்வேலியில் வைத்து சிறீலங்காப் படையினர்மீது ஒரு கண்ணிவெடித் தாக்குதலை நடத்தவென குறிப்பிட்ட வாகனமொன்றில், தேசியத்தலைவர் அவர்களும் அவருடன் செல்லக்கிளி அம்மான், விக்ரர், பொன்னம்மான், சந்தோசம் மாஸ்ரர், புலேந்தியம்மான், கணேஸ், ரஞ்சன், லிங்கம், பசீர்காக்கா, நான் மற்றும் சில தோழர்களும் அடங்கிய எமது தாக்குதல் குழுவில் ஒருவராக சுமார் ஐம்பது வயதை அடைந்துவிட்ட அப்பையா அண்ணரும் அங்கம் வகித்தார்.

21.10.2001 அன்று தமிழீழக் கடற்பரப்பில் வழங்கல் பணியை மேற்கொண்டிருந்த கடற்புலிகளின் கலங்களிற்கு பாதுகாப்பு வழங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது சிறிலங்கா கடற்படையினருடன் ஏற்பட்ட மோதலின்போது வீரச்சாவைத் தழுவிக் கொண்ட கடற்கரும்புலி கப்டன் இளங்குயிலனின் நினைவு நாளும் மற்றும் 


இதேநாள் சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த சிறிலங்கா கடற்படையின் டோறா கடற்கலங்களை முல்லைக் கடற்பரப்பில் வழிமறித்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட கடற்கரும்புலி மேஜர் றோசா, கடற்புலிகள் லெப்.கேணல் கலாத்தன், மேஜர் சிவா, கப்டன் செல்லப்பன், கப்டன் செந்தளிர், லெப். விநோதன் ஆகியோரின் நினைவு நாள் இன்றாகும்.








தமிழீழ தாயக விடுதலைக்காக தங்கள் இன்னுயிரை ஈகம் செய்த இந்த மானமாவீரர்களிற்கும் மற்றும் இதே நாளில் வீரச்சாவடைந்த ஏனைய மாவீரர்களுக்கும் எங்கள் வீர வணக்கத்தை தெரிவித்து கொள்கின்றோம்.

தமிழீழம் கிடைக்கும் வரை உங்களை நிச்சயம் தொடர்வோம்.

Image Hosted by ImageShack.us


இத்தளத்தின் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற தங்கள் மின்னஞ்சல் முகவரி கீழே பதிவு செய்யவும்

Image Hosted by ImageShack.us