எல்லாளன்: வன்னியில் தயாரிக்கப்பட்ட வீரத் திரைப்படம்.
தமிழர் விடுதலைப்போராட்ட வரலாற்றில் பெரு வெற்றிபெற்ற பெரும் தற்கொடைத் தாக்குதலில் ஒன்றாகும். இத்தாக்குதலின் பின்னர் இவ்வெற்றித் தாக்குதலை வெளியுலகிற்கு வெளிப்படுத்துவதற்காக சக போராளிகளின் பங்குபற்றுதலில் தயாரிக்கப்பட்ட திரைப்படம் தான் எல்லாளன் என்னும் திரைப்படமாகும்.
இக்காட்சியின் தொடக்கநிகழ்வில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் இப்படத்தின் தொகுப்பாளர் (editing) கோமகனின் தாயாரினாலும் கனடாவில் தயாரிக்கப்பட்ட ஆங்கிலத்திரைப்படத்தின் இயக்குனரும் தயாரிப்பாளருமான லெனின் அவர்களினாலும் குத்து விளக்கேற்றி ஆரம்பிக்கப்பட்டது.
21 கரும்லிகள் தங்கள் உயிரை ஈய்ந்து நடத்திய இத்தாக்குதலை எவ்வித கற்பனை கலப்புமின்றி அப்படியே மீண்டும் ஒரு முறை நம் கண்முன்னே நடத்திக் காட்டுகின்றது எல்லாளன் எனும் இத்திரைப்படம்.
ஒரு சில மணி நேர தாக்குதலுக்காக போராளிகள் எத்தனை நாட்கள் பயிற்சி என்னும் தவம் புரிந்துள்ளனா் என்பதும் நாட்டின் விடுதலைக்காய் தன் உயிரை உவந்து அளிக்கும் ஒவ்வொரு போராளியின் பின்னும் நேசமும் பாசமும் கொண்ட குடும்பமும் நட்பும், ஏன் காதலும் கூட இருக்கும் என்பது பலர் அறியாதது. ஆனால் இத்திரைப்படம் இவற்றை தத்துரூபமாக தெளிவாகக் காட்டுகின்றது
இத்திரைக்காவியம் ஈரமும் வீரமம் கொண்ட கவிதையாய் பதிவு செய்துள்ளது.
இப்படத்தின் நாயகன் உட்பட படத்தில் நடித்த நால்வர் படம் தயாரிக்கப்பட்டுக்கொண்டிருந்த காலத்திலேயே வீரச்சாவடைந்து விட்டனர் ஏனையோர் நிலை என்னவோ?
இத்திரைக்காவியம் வன்னியில் படப்பிடிப்பு செய்யப்பட்ட இறுதித்திரைப்படமாகும்.
இப்போதைக்கு எமக்காக மடிந்த மாவீரர்கள் தங்களின் வீர தீரத்தை ஈகத்தை எமக்கு காட்டியுள்ளனர் அந்ததக் காட்சிகள் இனி எப்ப வருமோ?
அவா்களுக்காக நாம் ஒரு தரம்…..
"எல்லாளன்" முழுநீளத் திரைப்படம்.
தேசக்காற்றே ஒரு நிமிடம் விழி தேடி பாரு ஒரு நிமிடம் எங்கே எங்கே காணலையே சென்ற கண்ணிர் வலிகள் திரும்பலையே...
முற்றும்.