ஈழம்

ஈழம்

சனி, 3 டிசம்பர், 2011

செந்தமிழ் வீரர்களே!


எந்த முகத்தொடு உங்கள் புகழ் சொல்ல
வந்திடுவோம் மைந்தரே - இன்று
சந்தை மடத்தினில் சண்டைபிடிப்பது 
என்ற தெனும் நிலையே

சொந்தம் இறந்திடச் சூழ்நிலை மாறிடச்
சுற்றிப் பிணம் வீழினும் - உள்ள
சொந்தக் கணக்கினில் பங்குபெருக்கணும்
என்றுமுன் நின்றனரே!

இன்று விளைத்தவர் கண்டுவருந்திநம்
உள்ளம் சிறுத்து விட்டோம் - பெருங்
குன்றென வீரமும் கொண்டு நிலங்கொள்ளக்
கொண்டதம் வாழ்விழந்தீர்

நின்றபெரும் மலை நேர்மை கொண்டோர்தனை
நெஞ்சங்கள் காண்பதுவோ - இனம்
கொன்றுகுவிப்பவர் தம்மை அணைந்தவர்
செய்வதைக் காண்பதுவோ

வந்து வானின்வெளிக் குண்டுகள் போட்டன்று
நஞ்சினைக் கொட்டிவன் - இன்று
சொந்தங்கள் நெஞ்சினின் வேகமெடுத்துக்கொல்
நஞ்சினை கொட்டுகிறான்

வந்தவர் நின்றவர் எந்தவர் ஈதிவர்
ஏதும் தெரியவில்லை - எது
சொந்தமென்றே யவர் நாமமெழுதிநீள்
நெற்றியில் ஒட்டவில்லை

முத்தமிழ், எம்மினம், மானம், விடுதலை
அத்தனையும் குவித்து - சிலர்
சொத்தினையே கூவிப் பத்துசதத்திற்கு
விற்று விழுங்குகிறார்

ரத்தினக் கம்பளம் வைத்து நடந்திட
புத்த மதத்தினர்க்கு - எங்கள்
ரத்தம் தெளித்ததில் சுத்தத் தமிழென
முத்திரை குத்துகிறார்

எந்த தெளிவு கொண்டுங்கள் துயிலில்லம்
வந்து சுடரொளியாம் - அன்பு
தந்திடும் தீபங்கள் தன்னை நிறுத்தி நல்
சபதங் கொண்டிடுவோம்

சிந்தையிலே நின்று தீயோ எரியுது
எந்த வழியுமில்லை - இந்த
சொந்த இனம்கொல்வோர் இங்குளர்
வேறெங்கும் இந்த உலகிலில்லை.


வருவான்டா எம் தலைவன் மீண்டும்.



Image Hosted by ImageShack.us

நன்றி.
கவிஞர்:கிரிஷாசன்

இத்தளத்தின் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற தங்கள் மின்னஞ்சல் முகவரி கீழே பதிவு செய்யவும்

Image Hosted by ImageShack.us