ஈழம்

ஈழம்

வியாழன், 26 ஜூலை, 2012

ஆனையிறவு தடைமுகாம் மீதான தாக்குதலில் காவியமான 69 மாவீரர்களி​ன் நினைவு நாள்.

ஆனையிறவு படைத்தளம் மீதான ஆகாய கடல்வெளி நடவடிக்கையின்போது தடைமுகாம் மீதான இரண்டாவது தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிய லெப். கேணல் சரா உட்பட்ட 69 மாவீரர்களினதும், இதேநாளில் வாகரையில் வீரச்சாவைத் தழுவிய வீரவேங்கை விவே என்ற மாவீரரினதும் 21ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.


ஆகாய கடல்வெளி நடவடிக்கையின்போது 11.07.1991 அன்று தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு வெற்றிக் கொள்ளப்படாதிருந்த தடைமுகாம் மீது 27.07.1991 இரண்டாவது தடவையாக விடுதலைப் புலிகளால் பாரிய தாக்குதல் தொடுக்கப்பட்டது.

தொடர்ச்சியாக மூன்று நாட்கள் நடாத்தப்பட்ட இந்த தாக்குதலில் சிறிலங்கா படையினர் பலர் கொல்லப்பட்டதுடன் பலர் காயமடைந்தனர். இந்த நடவடிக்கையின்போது படைத்தளம் நோக்கி முன்னகர்ந்த போராளிகளிற்கு காப்பாக விடுதலைப் புலிகளினால் உருவாக்கப்பட்ட கவச ஊர்தி ஒன்று பயன்படுத்தப்பட்டது.

எனினும், இக்கவச ஊர்தி படையினரின் எறிகணை வீச்சில் சிக்கிக் கொண்டபோது இதனை ஓட்டிச் சென்ற தளபதி லெப். கேணல் சரா மற்றும் மேஜர் குகதாஸ் ஆகியோர் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர். இவர்களுடன் முதல் நாள் தாக்குலில் 67 போராளிகள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர்.

இம்மாவீரர்களினதும், இதேநாளில் மட்டக்களப்பு மாவட்டம் வாகரையில் சிறிலங்கா படையினர் பதுங்கியிருந்து நடாத்திய தாக்குதலின்போது வீரச்சாவைத் தழுவிக் கொண்ட வீரவேங்கை விவே (பெர்னாண்டோ உதயராஜ் - மட்டக்களப்பு) என்ற மாவீரரினதும் 21ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.

தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த வீரவேங்கைகளை இன்றைய நாளில் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூருகிறோம்.

ஆனையிறவு படைத்தளத்தின் தடைமுகாம் மீதான இரண்டாவது தாக்குதலில் முதல்நாள் வீரச்சாவைத் தழுவிய 69 மாவீரர்களினதும் விபரம் வருமாறு:

லெப்.கேணல் சரா (சின்னத்துரை ஜீவராசா - யாழ்ப்பாணம்)

மேஜர் குகதாஸ் (இராசரத்தினம் இராஜேந்திரன் - யாழ்ப்பாணம்)

மேஜர் சொனி (சிவஞானசுந்தரம் அசோகன் - யாழ்ப்பாணம்)

கப்டன் நிறையன் (இராமமூர்த்தி விதுரன் - மட்டக்களப்பு)

கப்டன் ரகீம் (ஜசாக்டொனால்ட் வீரபாகு - யாழ்ப்பாணம்)

கப்டன் நிதி (இரத்தினம் இலங்கேஸ்வரன் - யாழ்ப்பாணம்)

கப்டன் கீர்த்தி (வீரப்பாபிள்ளை கனகேஸ்வரன் - யாழ்ப்பாணம்)

கப்டன் அல்பேட் (கந்தசாமி வன்னியசிங்கம் - யாழ்ப்பாணம்)

கப்டன் சௌகான் (சிவானந்தன் ஜோய்அன்ரனி - யாழ்ப்பாணம்)

கப்டன் சிவம் (பவான்) (திருப்பரங்கிரிநாதன் நெல்லைநாதன் - யாழ்ப்பாணம்)

கப்டன் சத்தியராஜ் (கந்தையா சத்தியசீலன் - திருகோணமலை)

கப்டன் வினோத் (கனகராசா பிரபாகரன் - யாழ்ப்பாணம்)

லெப்டினன்ட் வர்மன் (பாஸ்கரமூர்த்தி சுந்தரமூர்த்தி - மட்டக்களப்பு)

லெப்டினன்ட் சபா (மாரிமுத்து பத்மநாதன் - மட்டக்களப்பு)

லெப்டினன்ட் உமாசங்கர் (ரவி) (சின்னமணி சென்சியஸ் - யாழ்ப்பாணம்)

லெப்டினன்ட் நிமலேந்திரன் (பிரசன்னா) (தங்கவேல் செந்தில்குமரன் - யாழ்ப்பாணம்)

லெப்டினன்ட் சத்தியகுமார் (பொன்னையா சிவனேசராசா - மட்டக்களப்பு)

லெப்டினன்ட் அன்பு (பாலச்சந்திரன் றமணன் - யாழ்ப்பாணம்)

லெப்டினன்ட் வினோத் (தர்மலிங்கம் தயாளன் - யாழ்ப்பாணம்)

லெப்டினன்ட் பாரதி (நவரட்ணம் கோபாலாப்பிள்ளை - மட்டக்களப்பு)

லெப்டினன்ட் கேசியன் (கேசவன்) (பரஞ்சோதிநாதன் நியூற்றன்பிரான்சிஸ் - யாழ்ப்பாணம்)

லெப்டினன்ட் நெல்சா (சின்னக்குட்டி சரோசினிதேவி - யாழ்ப்பாணம்)

லெப்டினன்ட் குட்டி (செபஸ்தியம்மா அலோசியஸ் - மன்னார்)

2ம் லெப்டினன்ட் மதனா (சிவமலர் தளையசிங்கம் - யாழ்ப்பாணம்)

2ம் லெப்டினன்ட் மெடினா (மெடோனா) (செல்வராணி மாயழகன் - கிளிநொச்சி)

2ம் லெப்டினன்ட் வதனி (ஹென்சி பத்திநாதன் - மன்னார்)

2ம் லெப்டினன்ட் ஜசீரிமா (சிவலோஜினி சிவானந்தையர் - யாழ்ப்பாணம்)

2ம் லெப்டினன்ட் சுந்தரி (சுஜந்தா தேவநாயகம் - திருகோணமலை)

2ம் லெப்டினன்ட் இளவரசி (சிவப்பிரகாசம் சந்திரபவானி - முல்லைத்தீவு)

2ம் லெப்டினன்ட் காந்தன் (டானியேல் ராஜ்குமார் - யாழ்ப்பாணம்)

2ம் லெப்டினன்ட் வாணன் (குமார்) (நடேசு  ஜெயக்குமார் - யாழ்ப்பாணம்)

2ம் லெப்டினன்ட் மயில்வாகனம் (சின்னத்தம்பி சுந்தரலிங்கம் - யாழ்ப்பாணம்)

2ம் லெப்டினன்ட் ஜெயந்திரன் (ஜெயச்சந்திரன்) (கந்தப்பர் தவராசா - மட்டக்களப்பு)

2ம் லெப்டினன்ட் அல்பேட் (நடராசா கலைச்செல்வன் - யாழ்ப்பாணம்)

2ம் லெப்டினன்ட் நளினன் (நாகராசா சிவகுமார் - மட்டக்களப்பு)

2ம் லெப்டினன்ட் நிதி (செல்வநயினார் சுந்தர்ராஜன் - திருகோணமலை)

2ம் லெப்டினன்ட் விக்கி (இரத்தினம் சாந்தவேல் - யாழ்ப்பாணம்)

2ம் லெப்டினன்ட் கஜன் (கோபாலப்பிள்ளை புஸ்பராசா - திருகோணமலை)

2ம் லெப்டினன்ட் நிருபன் (வேலாயுதம் பாலச்சந்திரன் - திருகோணமலை)

2ம் லெப்டினன்ட் ஆனந்தன் (கந்தசாமித்துரை ராஜவேல் - யாழ்ப்பாணம்)

வீரவேங்கை திசைவீரன் (சற்குருநாதன் சற்குணபேசன் - யாழ்ப்பாணம்)

வீரவேங்கை ரகீம் (சகீம்) (நாகலிங்கம் ஜேகதாஸ் - யாழ்ப்பாணம்)

வீரவேங்கை திகில் (தங்கையா சேரன் - கிளிநொச்சி)

வீரவேங்கை வேலுப்பிள்ளை (யூனியன் கந்தையா கந்தசாமி - யாழ்ப்பாணம்)

வீரவேங்கை கிர்மானி (ஜோன்எட்வேட் கெனடி - யாழ்ப்பாணம்)

வீரவேங்கை பவா (கதிரித்தம்பி கணேசலிஙகம் - கிளிநொச்சி)

வீரவேங்கை பீலிக்ஸ் (அருளானந்தம் ரொனால்ட்ஆனந்த் - யாழ்ப்பாணம்)

வீரவேங்கை ராஜன் (குமாரசாமி குணராசா - யாழ்ப்பாணம்)

வீரவேங்கை வரதன் (வரதராஜன்) (மாசிலாமணி மகேந்திரன் - மட்டக்களப்பு)

வீரவேங்கை ஆனந்தபாபு (தங்கராசா நடராசா - மட்டக்களப்பு)

வீரவேங்கை புரூஸ்லி (மூர்த்தி) (சீவரத்தினம் சின்னவன் - மட்டக்களப்பு)

வீரவேங்கை கரன் (வேலாயுதம் சிவனையா - திருகோணமலை)

வீரவேங்கை மொரார்ஜி (அரசரட்ணம் அரவிந்தன் - திருகோணமலை)

வீரவேங்கை பிருந்தன் (சின்னராசா ஜெராட்திலகர் - மன்னார்)

வீரவேங்கை கில்பேட் (ஞானராசா ஞானதீபன் - மன்னார்)

வீரவேங்கை கார்த்திகா (மேரிகலிஸ்ரா சூசைப்பிள்ளை - யாழ்ப்பாணம்)

வீரவேங்கை பிரதீபா (ஜெயந்தி பெரியதம்பி - முல்லைத்தீவு)

வீரவேங்கை அன்பினி (சிவனடி விஜிதா - யாழ்ப்பாணம்)

வீரவேங்கை சிகிலா (ரங்சினி நடராசா - யாழ்ப்பாணம்)

வீரவேங்கை தங்கமணி (புஸ்பகலா நடராசா - யாழ்ப்பாணம்)

வீரவேங்கை டட்லியா (வரலட்சுமி தேவசிகாமணி - யாழ்ப்பாணம்)

வீரவேங்கை யாழ்மொழி (விஜயலதா பாக்கியநாதன் - யாழ்ப்பாணம்)

வீரவேங்கை சுனித்தா (குஸ்மாவதி கருணாகரன் - திருகோணமலை)

வீரவேங்கை ஜஸ்மின் (செல்வமலர் கோபாலப்பிள்ளை - திருகோணமலை)

வீரவேங்கை காயத்திரி (சந்திரசேகரம் உமாதேவி - முல்லைத்தீவு)

வீரவேங்கை நிசா (சதாசிவம் சுமதி - அம்பாறை)

வீரவேங்கை காண்டீபனி (சுகந்தினி வேலாயுதம் - கிளிநொச்சி)

வீரவேங்கை சசீந்தா (சூரியகுமாரி சுப்பிரமணியம் - வவுனியா)

வீரவேங்கை சுகந்தினி (யோகா கணபதிப்பிள்ளை - வவுனியா)

தமிழீழ தாயக விடுதலைக்காய் தமது இன்னுயிரை ஈகம் செய்த இந்த வீரமறவர்களிற்கு எங்கள் வீரவணக்கங்கள். இதே நாளில் வீரச்சாவைத் தழுவிய ஏனைய மாவீரர்களிற்கும் எங்கள் வீரவணக்கங்கள்.

தமிழீழம் கிடைக்கும் வரை உங்களை நிச்சயம் தொடர்வோம்.

Image Hosted by ImageShack.us


பேஸ் புக்கில் உங்கள் விருப்பத்தை தெரிவித்து எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள் உறவுகளே.

இத்தளத்தின் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற தங்கள் மின்னஞ்சல் முகவரி கீழே பதிவு செய்யவும்

Image Hosted by ImageShack.us