பிரியதர்சினி விஐயராசா
தமிழீழம்:யாழ்மாவட்டம்
தாய் மடியில் 23.03.1987
தாயக மடியில்: 15.05.2009
சூரியப்புதல்பற்கள்-2023 வீரவேங்கை நிறையிசை வீரவேங்கை நிறையிசை யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர். இவர் இந்துக் கல்லூரியில் தனது கல்வியைக் கற்றார். தனது கல்வியை சிறப்புற முன்னெடுத்தார். 2002 தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியற் துறையினர் அரசியல் பணியினை யாழ். மாவட்டத்தில் முன்னெடுத்திருந்த வேளையில் கல்வி செயற்பாட்டில் ஈடுபட்டிருந்த இவர் அரசியற் கூட்டங்களிற் பங்கு கொண்டார். இதனூடாக விடுதலைப் போராட்டம் சார்ந்த தெளிவினை ஆழமாகப் புரிந்து கொண்டார். இதன் மூலம் 2004 ஆம் ஆண்டு இவ் அமைப்பில் அரசியல் துறையினர் ஊடாகப் போராளியாக தன்னை இணைத்துக் கொண்டார்.
அதன் பின் வன்னியில் அடிப்படைப் பயிற்சியை நிறைவு செய்து நிறையிசை எனும் பெயருடன் வரிப்புலியாகி மாலதி படையணியில் இணைக்கப்பட்டார். தொடர்ந்து இவர் கல்வி. அறிவியல். படைத்துறை சார்ந்து சிறந்த ஆற்றல் உள்ளவராக இனங்காணப்பட்டு படையறிவியற் கல்லூரிக்கு அனுப்பப்பட்டார். அங்கு படை அறிவியல் சார்ந்து சிறப்பாகக் கற்றதோடு தனது ஆற்றலையும் திறமையையும் வெளிப்படுத்தி நின்றார்.
இக்காலப்பகுதியில் வன்னிக் கள முனைகள் திறக்கப்பட்டு சிறிலங்கா இராணுவம் தமிழர் நிலங்களைக் கைப்பற்றி முன்னேறிக் கொண்டிருந்தது. முன்னேறி வந்த இராணுவத்திற்கு எதிரானது தாக்குதலை மேற்கொண்டு படையணியுடன் நகர்ந்து வந்தார். அங்கிருந்து முள்ளிவாய்க்கால் வரை சிங்கள இராணுவத்திற்கு எதிராக வீரமுடன் களமாடி 15 மே 2009 வீரவேங்கை நிறையிசை தமிழீழ மண்ணில் வித்தனார். சூரியப்புதல்வர்கள்-2023
0 கருத்துகள்